fbpx

Alert…! அடுத்த 6 நாட்களுக்கு மழை… மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை…!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள், அதன் அருகே பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை முதல் 5-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும். இன்று முதல் ஜனவரி 3-ம் தேதி வரை தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

The Meteorological Department has said that there is a possibility of rain in Tamil Nadu for the next 6 days.

Vignesh

Next Post

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்த லாரி..!! 71 பேர் உயிரிழந்த சோகம்..!!

Tue Dec 31 , 2024
While attempting to cross a river bridge, the driver lost control of the truck and unexpectedly overturned into the river, causing an accident.

You May Like