fbpx

பெற்றோர்கள் கவனத்திற்கு!!! கடலை மிட்டாய் ஆரோக்கியமானதா..? மருத்துவரின் ‘ஷாக்’ பதில்..!

கடலை மிட்டாய் ஆரோக்கியமாக உணவு என்பதால் சமீபகாலமாக பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இதனால் இதனை அதிகம் பயன்படுத்துபவர்களும் இருக்கின்றனர். இப்படி கடலை மிட்டாயை அதிகம் பயன்படுத்துவது ஆரோக்கியமானதா என்பது குறித்து மருத்துவர் அருண்குமார் அளித்த விளக்கத்தை இப்போது பார்க்கலாம்.

இதனை ஒப்பீடு செய்வதற்காக அவர் எடுத்துக் கொண்ட பொருட்கள் கடலை மிட்டாய், வேர்க்கடலை, கீரீம் பிஸ்கட். கலோரிகள் என எடுத்து கொண்டால் கடலை மிட்டாயில் 520 கலோரிகள், கிரீம் பிஸ்கட்டில் 480 கலோரிகள், வேர்க்கடலையில் 550 கலோரிகள் உள்ளது. மாவு சத்து கடலை மிட்டாயில் 45 முதல் 50 கிராமும், கிரீம் பிஸ்கட்டில் 70 கிராமும், வேர்க்கடலையில் 15 கிராமும் இருக்கிறது.

சர்க்கரை அளவு கடலை மிட்டாயை 40-42கிராமும், கிரீம் பிஸ்கட்டில் 38-40 கிராமும் உள்ளது. மேலும் கொழுப்பு சத்து கடலை மிட்டாயில் 20 கிராமும், கிரீம் பிஸ்கட்டில் 15 கிராமும், வேர்க்கடலையில் 50 கிராமும் உள்ளது. புரதம் கடலை மிட்டாயில் 15 கிராமும், கிரீம் பிஸ்கட்டில் 5 கிராமும், வேர்க்கடலையில் 25 கிராமும் உள்ளது. இவ்வாறு ஒப்பிடுகையில் கிரீம் பிஸ்கட்டிற்கு சமமாக கடலை மிட்டாயிலும் சர்க்கரை அளவு உள்ளது. இதனால் கடலை மிட்டாயை ஆரோக்கியமான உணவாக கருதி அடிக்கடி உண்ண வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார் மருத்துவர் அருண் குமார்.

Read more: லஞ்ச் பாக்ஸில் துர்நாற்றம் வீசினால் குழந்தைங்க சரியா சாப்பிட மாட்டாங்க!! துர்நாற்றத்தை போக்க இதை மட்டும் செய்யுங்க..

English Summary

does the ground nut candy is healthy? doctors shocking answer

Next Post

மகாலட்சுமியின் அருள் கிடைக்க, வீட்டில் நிம்மதி, சந்தோஷம் அதிகரிக்க தினமும் விளக்கேற்றி வழிபடுங்கள்..!! அதுவும் இப்படி பண்ணி பாருங்க..!!

Fri Jan 3 , 2025
If you light a lamp in the puja room before sunrise at the time of Brahma Mugurtha i.e. Arunodaya, yogas will come.

You May Like