fbpx

திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகல.. ரூ.5000 கேட்டு புதுமணப்பெண் கொடூர கொலை..!! கணவர் கைது..

உத்தரபிரதேச மாநிலம் பூரண தாம்பூர் பகுதியில் வரதட்சணை கேட்டு மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு மாதமே ஆனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் கணவரை கைது செய்தனர்.

உயிரிழந்த பெண்ணின் தாயார் மோமினா கூறுகையில், தனது மகள் தரன்னும், பூரானா தாம்பூர் ஹுசைன்பூர் கிராமத்தில் வசிக்கும் அனிஷின் மகன் ஷுஐப் என்பவரை 7 டிசம்பர் 2024 அன்று திருமணம் செய்து கொண்டார். திருமணமான பெண்ணை வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் அடிக்கடி கொடுமை செய்து வந்தனர். மகளின் திருமணம் முடிந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. போதைக்கு அடிமையான கணவர் திங்கள்கிழமை இரவு என் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிவித்தார்.

பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, இறந்தவரின் கணவர் மற்றும் மாமனாரைக் கைது செய்தனர். திருமணமான பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், கணவன் குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் மீது புகார் அளித்துள்ளனர்.

போலீசார் கூறுகையில், சம்பவத்தன்று காலை 5,000 ரூபாய் கேட்டு பெண்ணின் தாய் வீட்டிற்கு கணவர் சென்றதாகக் கூறப்படுகிறது. குடும்பத்தினர் தங்களது இயலாமையை தெரிவித்து பணத்தை தர மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த கணவர், இரவு வீட்டில் மனைவியை தாக்கி, கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளான். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். திருமணமான புதுமணப்பெண் ஒரு மாதத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more ; ஆவின் நிறுவனத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? தேர்வு கிடையாது..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

Newlywed Woman Killed By Husband Over Rs 5,000 Dowry Demand In UP’s Bijnor

Next Post

அச்சுறுத்தும் HMPV.. சீனாவில் அசாதாரண நிலையா..? WHO சொன்ன முக்கிய தகவல்..

Thu Jan 9 , 2025
The World Health Organization (WHO) has released important information regarding the spread of HMPV.

You May Like