fbpx

காதலியை கரம்பிடித்தார் தெருகுரல் அறிவு!! சிறப்பு விருந்தினராக வந்து, வாழ்த்து தெரிவித்த இளையராஜா..

சுயாதீன பாடல்கள் மூலம் அறிமுகமாகி பல சினிமா திரைப்பட பாடல்களுக்கு வரிகள் எழுதி, பாடியவர் தான் தெருகுரல் அறிவு. ராப் இசையை, அதன் வரலாற்று முக்கியத்துவத்துடன் சேர்த்து பயண்படுத்தியவர்களில் ஒருவர் தான் இவர். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வரிகளை தனது பாடல்களில் வைத்து உருவாக்கிய தெருகுரல் அறிவு, விஜயின் தவெக கட்சி கொள்கைப் பாடலை இசையமைத்து பாடியுள்ளார். இவரது பாடல்கள், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, சமீபத்தில் அவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட வள்ளியம்மா பேராண்டி’ என்ற ஆல்பத்தில் இருந்த 12 பாடல்களும் பலரின் மனதை கவர்ந்தது.

இந்நிலையில், சென்னை தியாகராயர் நகரில் உள்ள இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில், இளையராஜா தலைமையில் தெருக்குரல் அறிவு தனது காதலியான கல்பனாவை இன்று திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது இயக்குனர் பா. ரஞ்சித் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். திருமணம் முடிந்த கையோடு அம்பேத்கர் பற்றி ராப் பாடலை அறிவு பாடினார்.

Read more: “எனக்கு அது சுத்தமா பிடிக்காது, ஆனா எங்க அம்மா தான்…” வைரலாகும் நித்யா மேனனின் பேட்டி…

English Summary

as therukural arivu married his lover, ilaiyaraja blessed them with his wishes

Next Post

"10 வயசுல இதெல்லாம் தேவையா?"; நண்பனின் காதலை சேர்த்து வைக்க போராடிய சிறுசுகள்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்..

Sat Jan 11 , 2025
16 years olds helped their friend for his love

You May Like