fbpx

ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்.. இனி எங்கும் அலைய வேண்டாம்..!! – மின்சார வாரியம் அசத்தல்

தமிழக அரசு ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக புதிய கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் ஓய்வூதிய விவரங்கள், மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பெறலாம். டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழையும் பதிவு செய்யலாம்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை மின்சார வாரியத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின்சார ஊழியத்தில் பணியாற்றி, பணிக்காலத்தின் போது உயிரிழந்த 311 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார். திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து மொத்தம் 2731 பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழக்கப்பட்டுள்ளது. நேற்று வழங்கப்பட்ட 311 பணி நியமன ஆணைகள் உட்பட..

மேலும், மின்சாரவாரிய ஓய்வூதியதாரர்கள் எளிதில் பயன்பெறும் வகையில் புதிய செயலியினை அறிமுகப்படுத்தி, மூன்று ஓய்வூதியதாரர்களுக்கு வாழ்நாள் சான்றிதழ்களை வழங்கினார் இந்திகழ்ச்சியில் மின்சார , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தவி.செந்தில் பாலாஜி மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்,பீலா வெங்கடேசன், இ.ஆ.ப. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருகதத்தருமார்.இ.ஆ.ப. தமிழ்நாடு மின் தொடரமைப்பு மேலாண்மை இயக்குநர் மணி இயக்குனர் (பகிர்மானம்) ஏ.ஆர் மஸ்கர்னஸ் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இச்செயலி வாயிலாக மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள்/குடும்ப ஓய்வூதியதாரர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தவாறே தங்களுக்கு தேவையான தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம் இச்செயலி மூலம் ஓய்வூதியதாரர்கள்/குடும்ப ஓய்வூதியதாரர்கள் கருணை ஓய்வூதியதாரர்கள் தங்களது மருத்துவ காப்பீட்டு அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாதாந்திர ஓய்வூதிய விவரம் வருடாந்திர ஓய்வூதிய அட்டவணை, வருமான வரி செலுத்துபவர்களுக்கான படிவம் 10 பதிவிறக்கம் மற்றும் அனைத்து பயனுள்ள தகவல்களும் இச்செயலியில் இனணக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் பெற ஆதார் எண்ணை KYC வாயிலாக இச்செயலி மூலம் எளிதாக பதிவு செய்யலாம்.

Read more : திக்!. திக்!. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!. சறுக்குகள் வழியே வெளியேறிய பயணிகள்!. 4 பேர் படுகாயம்!.

English Summary

Tamil Nadu Government has launched a new mobile app for the benefit of pensioners.

Next Post

IND Vs ENG | T20, ஒருநாள் தொடர் எப்போது..? நேரடி ஒளிபரப்பை எங்கே பார்ப்பது? - முழு விவரம் உள்ளே..

Sun Jan 12 , 2025
When is the India-England T20, ODI series..? Where to watch live streaming?

You May Like