முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் தான் மூட்டு வலி ஏற்படும். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், இளம் வயதினருக்கு கூட மூட்டு வலிகள் கடுமையாக இருக்கிறது. இது போன்ற வலிகளுக்கு, கண்ட கிரீம் மற்றும் ஸ்ப்ரே வாங்கி பயன்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும் நிவாரணம் கிடைத்தது போல் உங்களுக்கு இருக்கும். ஆனால் உடலுக்குள் இருக்கும் பாதிப்பு அப்படியே தான் இருக்கும். இதனால் வலியும் அடிக்கடி ஏற்படும்.
அந்த வகையில், உடலுக்குள் இருக்கும் பிரச்சனையை நாம் பிரண்டை மூலம் குணப்படுத்தலாம். பிரண்டை இலைகள் வலி நிவாரணியாக பயன்படுத்த, ஃப்ரெஷ்ஷாக இருக்கும் பிரண்டை இலைகளை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், இந்த இலைகளை சுமார் 3 நாட்களுக்கு வெயிலில் காய வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர், நன்கு காய்ந்த இலைகளை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அரைத்து வைத்துள்ள பிரண்டை பொடி 100 கிராம், சீரகப் பொடி 10 கிராம், மிளகு பொடி 10 கிராம் எடுத்து ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேலை உங்கள் உடல் சோர்வாக இருந்தாலோ, கை, கால் வலி அதிகமாக இருந்தாலோ இந்த பொடியை சாப்பிடலாம். இதற்கு, 2 கிராம் பொடியை அரை கிளாஸ் சுடுதண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். குறிப்பாக, காலை உணவு சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு இதை குடிக்க வேண்டும்.
இவ்வாறு இந்த பொடியை தொடர்ந்து 45 நாட்களுக்கு குடிக்க வேண்டும். நீங்கள் இப்படி தொடர்ந்து 45 நாட்களுக்கு குடித்து வந்தால், இது சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். அது மட்டுமல்லாமல், உடலின் இரண்டு முக்கிய உறுப்புகளான இதயம் மற்றும் மூளையை சீராக இயங்க உதவுகிறது. இதனால் இந்த பொடியை அரைத்து வைத்துக்கொண்டு தேவைப்படும் போதெல்லாம் குடித்துப் பாருங்கள், உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.
Read more: சிறுநீரக பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ இந்த கீரையை வாரம் 2 முறை சாப்பிடுங்க..