Citizenship issue: பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை ரத்து என்ற டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நடைமுறை கடந்த 1868-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. இந்த நடைமுறை ரத்து செய்யப்படும் என்று புதிய அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி அடுத்த 30 நாட்களில் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமை ரத்து செய்யப்பட உள்ளது. டிரம்பின் இந்த உத்தரவின்படி சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மட்டுமன்றி சுற்றுலாப் பயணிகள், கல்லூரி படிப்பிற்கு வந்தவர்கள், தற்காலிக தொழிலாளர்களாக வேலை செய்ய வந்தோர் ஆகியோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் கூட பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படாது. இந்த புதிய விதிகள் பிப்ரவரி 20ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் உத்தரவிடப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து 22 மாகாணங்கள் சார்பில் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. சமூக நல அமைப்புகளும் அதிபர் ட்ரம்ப் முடிவுக்கு எதிராக வழக்குகளை தொடுத்துள்ளன.
இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெடரல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி ஜான் சி. கஃஹெனூர், இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இது என் மனதைக் குழப்புகிறது, இந்த உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரான உத்தரவு” என்று குறிப்பிட்ட நீதிபதி இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
Readmore: ஆஸ்கரில் இடம் பிடித்ததா கங்குவா..? 13 பிரிவுகளில் ஒரே படம்..!! வெளியான பரிந்துரை பட்டியல்..!!