கலைத்துறையில் நடிகர் அஜித் குமாரின் பங்களிப்பை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷண் விருதை அறிவித்துள்ளது.
பொது சேவை, கலை, அறிவியல், தொழில், மருத்துவம், இலக்கியம், பொறியியல், வர்த்தம், பொது விவகாரங்கள், வணிகம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பிரிவுகளில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க, இந்திய அரசு ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகளை அறிவிக்கும். இந்த பத்ம விருதுகள் “பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன்” என மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படும்.
அந்த வகையில் 2025 ஆண்டுக்கான பத்ம விருதுகள் 139 பேருக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும், 19 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். அந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 10 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும், என மொத்தம் 13 பேருக்கு பத்ம விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக, நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருதும், பிரபல கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பத்ம பூஷண் விருது கலைத்துறையில் நடிகர் அஜித் குமாரின் பங்களிப்பை பாராட்டி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகை சோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர் ரவிசந்திரன் அஸ்வின், சமையல் கலைஞர் செஃப் தாமோதரன் (தாமு), தாள வாத்திய கலைஞர் குருவாயூர் துரை, பறை இசைக்கலைஞர் வேலு ஆசான், லக்ஷ்மிபதி ராமசுப்பையர், எம்.டி.சீனிவாஸ், தெருக்கூத்து கலைஞர் பி.கே.சம்பந்தன், ஆர்.ஜி.சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி, சீனி விஸ்வநாதன் ஆகிய தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More: “இதனால் தான், நான் என் குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன்”; இளையராஜா பதிவிட்ட உருக்கமான பதிவு..