திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, 19 வயதான ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வசித்து வரும் தே பகுதியில், பிளஸ் 2 படித்து வரும் 17 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறார். இந்நிலையில், ராணிக்கு பள்ளி சிறுவன் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ராணி தனது காதலை சொல்ல, சிறுவனும் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளான். இதையடுத்து, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், தங்களின் காதலுக்கு எப்படியும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதை தெரிந்துக்கொண்டு, இருவரும் வீட்டை விட்டுச் சென்றுள்ளனர். பின்னர் இருவரும், ஈரோட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து, வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து, அங்கு இருவரும் கணவன் மனைவி போல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், சிறுவன் வீட்டில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.
ஆனால் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இருவரும் ஈரோட்டில் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் இருவரையும் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது இருவரும் தங்களுக்கு திருமணம் ஆனதை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ராணி மீது குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்சோ ஆகிய இரண்டு பிரிவுகளையும் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இளம்பெண், பள்ளி சிறுவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.