நம் நாட்டின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தனது துணிச்சலான பொருளாதாரக் கொள்கைகளுக்காக எப்போதும் தலைப்புச் செய்திகளில் இருப்பவர். அவர் இன்று 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதுபற்றிய எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன.
மத்திய பட்ஜெட் தினத்தன்று நிர்மலா சீதாராமன் எந்த மாதிரியான அறிவிப்புகளை வெளியிடுவார் என்பதைப் போலவே அவரது உடை குறித்தும் அதிகம் பேசப்படும். ஒவ்வொரு முறையும் பட்ஜெட் நாளில் ஒரு ஸ்பெஷல் சேலை அணிந்திருப்பார். மத்திய பட்ஜெட்டுக்காக நாட்டு மக்கள் ஒருபக்கம் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், 2019ஆம் ஆண்டு முதல் அவரது புடவை தேர்வும் கவர்ச்சிகரமான விஷயமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டின் போது நிர்மலா சீதாராமன் அணியும் சேலை மக்களின் கவனத்தை ஈர்க்கிறது.
அந்தவகையில், 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய சனிக்கிழமை நாடாளுமன்றத்துக்கு வந்தார். பத்ம விருது பெற்ற துலாரி தேவி தயாரித்த மதுபானி கலைப் புடவை அணிந்திருந்த அவரது உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மிதிலா கலை மதுபானி மாவட்டம் முழுவதும் பிரபலமானது மற்றும் இயற்கையான சாயங்கள், தூரிகைகள், ஓவியங்கள், மரக்கிளைகள் மற்றும் தீப்பெட்டிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆடையில் வடிவமைக்கபடுகிறது.
நிரமலா சீதாராமனின் பட்ஜெட் புடவையின் பின்னணியில் உள்ள கதை :
பீகாரைச் சேர்ந்த மிதிலா ஓவியரான துலாரி தேவி, மிதிலா ஆர்ட் இன்ஸ்டிடியூட்டில் கடன் அவுட்ரீச் நடவடிக்கைக்காக மதுபானிக்குச் சென்றபோது நிதி அமைச்சரைச் சந்தித்தார். அப்போது மதுபானி கலை பற்றிய சிந்தனைகளை பரிமாறிக் கொண்டனர். அப்போது மிதிலா புடவையை அவருக்கு பரிசளித்தார். மதுபானி கலையைப் பாதுகாப்பதில் துலாரி ஆற்றிய பங்களிப்பிற்காக அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவர் கலை சமூகத்தில் ஒரு முக்கிய நபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். துலாரி தேவியை கவுரவிக்கும் விதமாக 2025-26 பட்ஜெட் தாக்கல் செய்ய மிதிலா புடவையை அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Read more : Budget 2025 | தொடர்ந்து 8 வது முறையாக பட்ஜெட் தாக்கல்.. புது சாதனை படைக்கப்போகும் நிர்மலா சீதாராமன்!