சேலம் மாவட்டத்தில் இன்று முதல் தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் ஒவ்வொரு ஆண்டும் 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது, சேலம் மாவட்டத்தில் இன்று முதல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 17.02.2025 திங்கட்கிழமை அன்று நடைபெறும். இம்முகாமில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கும் (கருவுற்ற மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் தவிர) இலவசமாக அல்பெண்டசோல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 2,696 அங்கன்வாடி மையங்கள், 2339 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள். 114 உயர் கல்வி நிறுவனங்கள் 35 குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் 10.022025 அன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுடைய 1117466 நபர்களும், 20 முதல் 30 வயதுடைய பெண்கள் கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர 2.24827 நபர்களும் என மொத்தம் 13.42293 நபர்கள் பயனடைய உள்ளனர்.