நடிகர் ரஜினியின் படம் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? கட்டாயம் இருக்க முடியாது. ரஜினி நடிக்காவிட்டாலும் கூட, சும்மா நடந்தாலே விசிலை பறக்கவிடும் ரஜினி வெறியர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் நடிகர் ரஜினி நடித்த படங்கள் அனைத்துமே ரசிகர்களின் பெரும் வரவேற்ப்பை பெற்றது தான். அதன் படி, சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், ஜனகராஜ், விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்த பிளாக் பஸ்டர் திரைப்படம் தான் பாட்ஷா.
கடந்த 1995ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி ரிலீஸாகி சூப்பர் ஹிட்டான இந்த திரைப்படம், இன்றளவும் பலருக்கு விருப்பமான திரைப்படமாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் ரஜினியின் கெரியரில் மறக்க முடியாத படமாகவும் பாட்ஷா அமைந்தது. இந்த படத்தில் மட்டும், ஹீரோ பாட்ஷாவிற்கு எத்தனை புகழ் கிடைத்ததோ அதே அளவிற்கு வில்லன் மார்க் ஆண்டனிக்கும் புகழ் கிடைத்தது.
வில்லன் மார்க் ஆண்டனியையும் யாராலும் இன்று வரை மறக்க முடியாது. இந்தப் படத்திற்கு கூடுதல் சிறப்பு அம்சம் என்றால், அது தேவா இசையில் பாடல்களும், பி.ஜி.எம்.மும் தான். என்ன தான் பாட்ஷா படம் ரிலீஸாகி 30 ஆண்டுகள் ஆனாலும், இன்றும் பலரால் பேசப்பட்டு வருகிறது. ரசிகர்கள் பலரின் மனதை வென்ற இந்த படத்தை, கடந்த 2017ம் ஆண்டு ரீ ரிலீஸ் செய்தார்கள்.
பழைய படங்களை தேடித் தேடிப் பார்க்கும் டிரெண்ட் அதிகரித்து வரும் நிலையில், வரும் ஏப்ரல் மாதம் பாட்ஷா படத்தை 4கே டிஜிட்டலில் ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாக இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தற்போது தெரிவித்துள்ளார். பாட்ஷா படம் ரீ ரிலீஸில் பாக்ஸ் ஆபீஸை தெறிக்கவிடப் போகிறது என்று நம்பப்படுகிறது. ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை என்பதால், பாட்ஷா படத்தை பார்க்க பலரும் தியேட்டர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: இறப்பதற்கு முன்பு நடிகை சௌந்தர்யா சொன்ன அந்த காரியம்; பிரபல பத்திரிகையாளர் பகிர்ந்த தகவல்..