fbpx

2026ல் சீமான் கட்சியுடன் விஜய் கூட்டணியா? புஸ்ஸி ஆனந்த் சொன்ன பதில்!!

2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் விஜய் கூட்டணி வைக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு புஸ்ஸி ஆனந்த் பதில் அளித்துள்ளார்.

மே 28 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமபந்தி விருந்து நடைபெற்றது. சென்னை திருவான்மியூரில் உள்ள தென்சென்னை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தாமு என்பவர் சமபந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு அனைவருக்கும் உணவு பரிமாறி, அவர்களோடு அமர்ந்து சாப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“ஜூன் 22 விஜய் பிறந்தநாளன்று, தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்வோம். பொதுக்கூட்டம் தொடர்பான எந்த விஷயமாக இருந்தாலும் தமிழக வெற்றில் கழகத் தலைவர் விஜய்தான் அறிவிப்பார். அவரின் அறிவிப்புக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றார். மேலும்
2026-ல் நாம் தமிழருடன் இணைந்து போட்டியா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து போட்டியிடுமா என்பது குறித்து, கட்சித் தலைவர்தான் முடிவெடுப்பார். அவரே அறிவிப்பார் என்றார். மேலும் இந்த ஆண்டும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினர். கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் சட்டப்பேரவை தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய் கல்வி ஊக்கத் தொகை வழங்கி கௌரவித்தார். இந்த ஆண்டும் எவ்வித பிரச்சனையும் இன்றி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

Read More: 10 அணிகள்!! உலகெங்கும் ரசிகர்கள்!! கோடிகளில் வருமானம்!! ஐபிஎல் அணி உரிமையாளர்களின் விவரம் இதோ!!

Baskar

Next Post

கவனம்...! 12-ம் வகுப்பு மாணவர்கள் இன்று 1 மணி முதல் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்...!

Wed May 29 , 2024
மறுகூட்டல் , மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்று பிற்பகல் 1 மணி முதல் ஜூன் 1-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 2024-ம் ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுகூட்டல் , மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்று பிற்பகல் […]

You May Like