பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாகவுள்ள 1,194 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ)
பணியின் பெயர் : Concurrent Auditor
காலியிடங்கள் : 1,194
தகுதி : இந்த பணிக்கு எஸ்பிஐ மற்றும் அதன் இணை வங்கிகளில் கிரெடிட், ஆடிட், forex பின்னணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம் : சென்னை, அகமதாபாத், அமராவதி, பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், கவுஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மகாராஷ்டிரா, மும்பை மெட்ரோ, டெல்லி, பாட்னா, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். (சென்னையில் 88 காலியிடங்கள் உள்ளது)
வயது வரம்பு : 60 முதல் 63 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் :
MMGS III -ல் ஓய்வு பெற்றவர்கள் என்றால் மாதம் ரூ.45,000
SMGS -IV ல் ஓய்வு பெற்றவர் என்றால் மாதம் ரூ.50,000
SMGS-V ஓய்வு பெற்றவர் என்றால் மாதம் ரூ.65,000
TEGS – VI ஓய்வு பெற்றவர் என்றால் ரூ.80,000 வரை சம்பளம் வழங்கப்படும்
விண்ணப்பிப்பது எப்படி..?
இந்தப் பணிக்கு விண்ணப்பிப்போர் https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது, தங்களின் அடையாள அட்டை, வயது ப்ரூப் போன்ற அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவுக்கு அழைக்கப்படுவார்கள். இண்டர்வியூ 100 மதிப்பெண்களின் அடிப்படையில் நடக்கும். இப்பணிக்கு எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது.
இப்பணிக்கு ஆன்லைன் விண்ணப்பிக்க : https://recruitment.bank.sbi/crpdrs33/apply
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.03.2025