அக்கம்பக்கத்தில் அதிகம் ஒலி வைத்து பாட்டு கேட்டால், ஏதேனும் பிரச்சனை நடந்தால் போலீசிடம் புகார் கொடுப்பது வழக்கம். ஆனால், நித்தமும் கூவும் பக்கத்து வீட்டுக்காரரின் சேவலால் எரிச்சலான ஒருவர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் புகார் அளித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பல்லிக்கல்லில் பகுதியை சேர்ந்த நபர் குருப். உடல் நலம் சரியில்லாத நிலையில், வீட்டிலிருந்தே ஒய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில், இவரின் பக்கத்து வீட்டுக்காரரான குமார் என்பவரின் சேவல் தனது தூக்கத்தைக் கெடுப்பதாகக் கூறி, அடூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் (RDO) புகார் அளித்தார். அதிகாரிகள் புகாரை தீவிரமாக எடுத்துக் கொண்டனர். பிரச்சனைக்குக் காரணம் சேவல்தான் என்று கருதி, RDO விசாரணையைத் தொடங்கினார்.
இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்க குருப் மற்றும் குமார் இருவரும் அழைக்கப்பட்டனர், பின்னர் அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்தனர். பக்கத்து வீட்டுக்காரர் தனது வீட்டின் மேல் தளத்தில் சேவல்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்ச்சையைத் தீர்க்க, கோழி கொட்டகையை மேல் தளத்திலிருந்து நிலத்தின் தெற்குப் பகுதிக்கு மாற்றுமாறு ஆர்.டி.ஓ., பக்கத்து வீட்டுக்காரருக்கு அறிவுறுத்தினார். அதிகாரிகள் இடமாற்றத்திற்கு 14 நாட்கள் கால அவகாசம் அளித்தனர்.
Read more : இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலில் வேலை.. கை நிறைய சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா..?