மனிதனின் உடலில், சின்ன மாற்றங்கள் ஏற்பட்டாலும் நம் உடனடியாக அதற்கு கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால், பெரிய பிரச்சனைகளில் முடிந்து விடும். அந்த வகையில், பலர் கவனிக்காமல் விட்டு விடுவது சீறுநீரக பிரச்சனைகளை தான். ஆம், சிறுநீரக நோய்த்தொற்றின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து சிறுநீரக நிபுணர் டாக்டர் சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். கட்டாயம் இதைத் தெரிந்துக் கொண்டு விழிப்புடன் இருப்பது நல்லது.
சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறை இல்லாததால் பலருக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகிறது. தற்போது உள்ள காலகட்டத்தில் உள்ள உணவு பழக்கங்களால் வயதானவர்கள் மட்டும் இல்லாமல், இளைஞர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், நமது சிறுநீரகம் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க, உணவு பழக்கங்களுடன் சேர்த்து, வாழ்க்கை முறையையும் மாற்ற வேண்டியது அவசியம்.
ஒரு வேலை ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளது என்றால், இந்த சில முக்கியமான அறிகுறிகள் இருக்கும். சிறுநீரக பிரச்சனையால் ஏற்படும் குறைபாடு குழந்தையின்மை. ஆம், சீறுநீரக பிரச்சனை இருந்தாலும் குழந்தையின்மை ஏற்படும். ஆனால் இது முக்கிய காரணமாக இருக்க வாய்ப்பில்லை, ஆனால் இதுவும் ஒரு காரணமாக இருக்கும். ஒரு சிலருக்கு அடிக்கடி வாந்தி, விக்கல், சாப்பாடு மீது வெறுப்பு ஆகியவை இருக்கும். இதுவும் சிறுநீரக கோளாறின் அறிகுறிகள் தான்.
மேலும், நாள்பட்ட சிறுநீரகக் கோளாறால் மார்புப் பகுதியில் வலியும், மூச்சுத் திணறலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு அதிக நேரம் பயணம் செய்யும் போது, கை கால் வீக்கம் ஏற்படும். இதை பலர் சாதரணமாக எடுத்துக்கொள்வது உண்டு. ஆனால் பயணத்தின் போது, பாதங்கள் மற்றும் குதிகால் சுற்றி வீக்கம் இருப்பது, சிறுநீரக செயலிழப்புக்கு அறிகுறியாக இருக்கலாம். இதனால் இது போன்ற பிரச்சனைகள் இருந்தால், தாமதிக்காமல் உடனடியாக நல்ல மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.