fbpx

சூப்பர் அறிவிப்பு…! சமூகப்பணி உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் வேலை..! உடனே விண்ணப்பிக்கவும்

இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகைள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன. இளைஞர் நீதி குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட இரண்டு சமூகப்பணி உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் மற்றும் இப்பதவி அரசு பணி அல்ல.

விண்ணப்பதாரர் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும். (அல்லது) குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் பத்திரிக்கையில் செய்தி வெளியிடும் நாளில், விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இதற்கான விண்ணப்பபடிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது துறை சார்ந்த இணையதள முகவரியிலிருந்து (https://dsdcpimms.tn.gov.in) விண்ணப்பத்தாரர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் 07.03.2025 (வெள்ளிக் கிழமை) மாலை 5.00 மணிக்குள் இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண்.300 புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-600010. என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

A notice has been issued for the appointment of social workers to the Youth Justice Group.

Vignesh

Next Post

அமெரிக்காவில் 4 இந்திய நிறுவனங்கள் மீது தடை விதிக்கும் அதிபர் டிரம்ப்!. என்ன காரணம்?

Tue Feb 25 , 2025
President Trump to ban 4 Indian companies in the US! What is the reason?

You May Like