fbpx

ஓபிஎஸ் மகன் மீது ஏன் நடவடிக்கை இல்லை..? எடப்பாடி தரப்பு பதிலளிக்குமா..? முரசொலி கேள்வி

ரவீந்திரநாத் எம்.பி மீது ஏன் நடவடிக்கை இல்லை என திமுக நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், “திமுக ஒரு தீயசக்தி… அதை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவதற்காக எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கினார். அந்த திமுக-வை ஓ.பன்னீர்செல்வம் புகழ்ந்து பேசுகிறார். அவருடைய மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு வந்து, அவரது செயல்பாடுகளின் சிறப்பைப் பற்றிப் பேசுகிறார். இவை எல்லாம் கட்சி விரோத நடவடிக்கைகள்’ எனக் கூறி அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தையும், அவருக்குத் துணையாக இருந்த வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது..!

AIADMK Tussle: AIADMK Tussle: EPS Is New Boss, Rival OPS Expelled

ஓ.பன்னீர்செல்வம் திமுக-வையும் கலைஞரையும் புகழ்ந்து பேசியதால் அவரையும் சட்டமன்ற உறுப்பினர்களாக விளங்கும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து நீக்கிய பழனிசாமி கூட்டம், ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்தை ஏன் நீக்கவில்லை?. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு அவரது ஆட்சியைப் பாராட்டிப் பேசியது தவறு – என்று பேசினீர்களே; அறிக்கைகள் வெளியிட்டீர்களே; பன்னீர்செல்வத்தின் மீதான குற்றச்சாட்டுக்களில், அவரது மகன் முதலமைச்சரைப் பாராட்டிப் பேசியதும் ஒன்றல்லவா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், ரவீந்திரநாத் மீது ஏன் நடவடிக்கையில்லை? அவரை ஏன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கவில்லை? எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்குமா? என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.

Chella

Next Post

வரும் 20ஆம் தேதி இலங்கை புதிய அதிபர் தேர்வு..! வெளியான பரபரப்பு தகவல்..!

Tue Jul 12 , 2022
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 20ஆம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் புரட்சியாளர்களாக மாறியுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், இலங்கையே போராட்டக்களமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிபர் மாளிகையை கைப்பற்றி சூறையாடினர். […]
”இந்த சமூகத்தில் இனியும் நம்மால் வாழ முடியாது”..! இலங்கை அதிபரின் திடீர் முடிவால் பரபரப்பு..!

You May Like