கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே காமசந்திரம் என்ற கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தில், 32 வயதான பெரியசாமி என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுக்களுக்கு முன்பு பெரியசாமிக்கும் 25 வயதான கோகிலா என்பவருக்கும் திருமணமான நிலையில், இந்த தம்பதிக்கு தற்போது 2 வயதான மகள் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி, பெரியசாமி நமலேரி கூச்சுவாடி சாலையில் சென்றுள்ளார். அப்போது அவரை 2 வாலிபர்கள் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். மேலும், “இனி நீ எங்கள் பிரச்சனையில் தலையிட்டால் உன்னை கொல்லாமல் விடமாட்டோம்” என்று மிரட்டி, அவரது தலையில் கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பெரியசாமி, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், நடந்த சம்பவம் தொடர்பாக, தேன்கனினக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பெரியசாமியை வெட்டியது சூளகிரி அருகே உள்ள சூழால் தின்னை கிராமத்தை சேர்ந்த 24 வயது வெங்கட்ராமன் என்பவரும், அதே கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பெரியசாமியை வெட்டிய 17 வயது சிறுவனுக்கும், பெரியசாமியின் மனைவி கோகிலாவிற்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பது தெரியவந்துள்ளது. தனது மனைவியின் கள்ளத்தொடர்பை அறிந்த பெரியசாமி, அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கோகிலா, நடந்ததை எல்லாம் தனது கள்ளக்காதலனிடம் கூறியுள்ளார்.
இதனால் கோவமடைந்த கோகிலாவின் கள்ளக்காதலனான 17 வயது சிறுவன், தனது நண்பரான வெங்கட்ராமனுடன் சேர்ந்து பெரியசாமியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன் படி, இருவரும் பெரியசாமியை வழிமறித்து தலையில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. குற்றம் உறுதி செய்யப்பட்டதால், கோகிலா, வெங்கட்ராமன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதில், 17 வயது சிறுவன் சேலம் கூர்நோக்கு இல்லத்திலும், கோகிலாவை தருமபுரி பெண்கள் கிளை சிறையிலும், வெங்கட்ராமனை ஓசூர் கிளை சிறையிலும் போலீசார் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read more: “அம்மா, அந்த தாத்தா என்னோட டிரெஸ்ஸை கழட்டி……” 7 வயது சிறுமிக்கு, பூசாரி செய்த காரியம்..