fbpx

தவெக தொண்டர்களை உடனே விடுதலை செய்ங்க..!! – தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்

உலக மகளிர் தினமான இன்று தவெக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மகளிர் அணியினர் மற்றும் தவெக தொண்டர்கள் அறவழியில் அடையாளப்ப்போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கைதான தவெக தோழர்களையும், மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய அரசுக்கு விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியும் வரும் நிலையில், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, உலக மகளிர் தினமான இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கழக மகளிர் அணியினர் மற்றும் தோழர்கள் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தினர்.

தங்களுக்கான உரிமை கிடைக்காத பட்சத்தில் அதை வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் தமிழ்நாட்டுப் பெண்கள் இருப்பதால்தான் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த அறவழி அடையாளப் போராட்டமானது நடைபெற்றது. ஆனால் தமிழக மக்கள் தங்களின் தேவைகளுக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது என்ற அராஜகப் போக்குடன் தமிழக அரசு, கழக மகளிர் மற்றும் தோழர்களைக் கைது செய்திருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தோழர்களையும் மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Read more:’பாமக துண்டுடன் சாதிய பாட்டுக்கு நடமானடிய மாணவர்கள்’..!! பள்ளி தலைமை ஆசிரியர் அதிரடி மாற்றம்..!! அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

English Summary

Release the Tvk workers immediately..!! – Vijay urges the Tamil Nadu government

Next Post

பழைய தங்க நகைகள் புதியது போல ஜொலிக்க வேண்டுமா..? வீட்டிலேயே இதைச் செய்யுங்கள்..

Sat Mar 8 , 2025
Gold Jewelry: If you want your old gold jewelry to shine like new... do this at home

You May Like