தஞ்சை அருகே, நாஞ்சிக்கோட்டை பர்வீன் தியேட்டர் உள்ளது. இந்தப் பகுதியில் 60 வயதான ஆரோக்கியசாமி என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர், தற்போது வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். குறிப்பாக, அவர் பெண்களுக்கு மட்டுமே வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இவர் வசித்து வரும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆரோக்கியசாமியை தொடர்பு கொண்டு, குடும்ப கஷ்டம் காரணமாக ரூபாய். 15 ஆயிரம் வட்டிக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு ஆரோக்கியசாமி,”நாம் உனக்கு கொடுக்கும் பணத்தை நீ திரும்பி கொடுக்க வேண்டாம். ஆனால் எனக்கு மனைவி இல்லாததால், நீ என்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் ” என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தனக்கு வட்டிக்கு பணமே வேண்டாம் எனக் கூறிவிட்டு, போனை கட் செய்து இருக்கிறார். ஆனால் ஆரோக்கியசாமி, அதோடு விடாமல், திரும்பவும் அந்தப் பெண்ணிற்கு போன் செய்து “வீட்டுக்கு வந்து பணத்தை தருகிறேன், ஆனால் நான் உன்னிடம் கேட்ட காரியத்தை வெளியே சொல்லி விடாதே” என்று கூறியுள்ளார்.
ஆரோக்கியசாமியின் இந்த பேச்சால் சந்தேகம் அடைந்த அந்தப் பெண், தனது வீட்டிலேயே தொலைபேசியை மறைவான இடத்தில் வைத்து வீடியோவை ஆன் செய்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த ஆரோக்கியசாமி, சாதரணமாக பேசியுள்ளார். அப்போது அந்தப் பெண், “அவசரத்திற்கு பணம் கேட்டால் என்னிடம் நீங்கள் தவறாக நடக்க முயற்சிக்கலாமா?” என்று கேட்டுள்ளார்.
அப்போதும் அவர், நான் பணம் தருகிறேன் ஆனால் நீ என்னுடன் தனிமையில் இரு என்று கூறி, திடீரென அந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தப் பெண், அவரை தள்ளிவிட்டு விட்டு, வெளியே கிளம்புங்கள் என அவரை திட்டி வெளியே அனுப்பியுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அவரது செல்போனில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து, அந்தப் பெண் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ஆரோக்கியசாமி வட்டிக்கு பணம் தருவதாக கூறி பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.