இப்போது உள்ள காலகட்டத்தில், ஆரோக்கியமான வாழ்வு என்பது பெரிய கனவாக மாறிவிட்டது. ஆம், நோய் இல்லாமல் வாழ்வதே பெரிய காரியம் என்று பலர் நினைக்கின்றனர். இதனால் ஒரு சில முயற்சிகளையும் மக்கள் செய்து வருகின்றார். ஆனால் பல நேரங்களில், ஆரோக்கியமாக வாழ நாம் என்ன செய்ய வேண்டும் என்று பலருக்கு தெரிவது இல்லை.
ஆம், ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். அந்த வகையில், நம் உடல் ஆரோக்கியமாக இருக்க, நாம் உணவுடன் சேர்த்து பழக்கத்தில் பழங்களையும் சேர்த்துக்கொள்வது அத்தியாவசியம் ஆகும். தினமும் முடிந்த வரை ஒரு பழம் சாப்பிடுவது நல்லது. ஆனால் உங்களால் தினமும் ஒவ்வொரு பழம் வாங்கி சாப்பிட முடியாத பட்சத்தில், நீங்கள் தினமும் அத்திப்பழம் சாப்பிடலாம்.
தினமும் அத்திப்பழம் சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். ஆம், பார்க்க சிறியதாக இருந்தாலும், இதில் இருக்கும் சத்துக்கள் அநேகம். தொடர்ந்து அத்திப்பழம் சாப்பிடுவதால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மேலும், இதில் குறைந்த அளவு மட்டுமே நார்ச்சத்து இருப்பதால், உணவு செரிமானம் ஆகும் நேரத்தை இது அதிகரிக்கிறது.
இதன் விளைவாக, இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மெதுவாக உடலில் சேரும். இதனால், சர்க்கரை அளவு ரத்தத்தில் உடனடியாக அதிகரிக்காது. பல பெண்களுக்கு இருக்கும் பிரச்சனையான இரத்த சோகைக்கு இதை விட சிறந்த மருந்து ஒன்று கிடையாது. ஆம், நாம் அத்திப்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனை முற்றிலும் குணமாகும்.
அத்திப்பழத்தை உட்கொள்வதன் மூலம், எலும்புகள் மற்றும் தசைகள் வலுவடைகிறது. ஏனென்றால், இதில் அதிகமான அளவு கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளது. மேலும், ரத்த அழுத்தத்தை குறைக்க அத்திப்பழம் பெரிதும் உதவும். மேலும் இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை நீக்கி, இதய நோய் ஏற்படாமல் தடுக்கும்.
Read more: உங்கள் நெய் தூய்மையானதா? கலப்படமான நெய்யை கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்..