fbpx

பெற்றோர்களே கவனம்!!! தனியாக கடைக்கு சென்ற சிறுமிக்கு, உடன் படிக்கும் மாணவர்களால் நடந்த கொடூரம்..

மதுரை மாநகர் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் வழக்கம் போல், அருகில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கடைக்குச் சென்ற சிறுமி வீட்டிற்க்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

இதனால் மேலும் பதற்றம் அடைந்த சிறுமியின் பெற்றோர், மேலும் பல இடங்களுக்கு சென்று தேடியுள்ளனர். இந்நிலையில், நீண்ட நேரத்திற்கு பிறகு, சிறுமி அழுது கொண்டே தனது பெற்றோர் முன்பு வந்து நின்றுள்ளார். இதனால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர், என்ன நடந்தது என்று விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி, அப்பகுதியை சேர்ந்த சிலர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக சம்பவம் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமியுடன் பள்ளியில் படித்து வரும் 3 மாணவர்கள் உள்பட 6 சிறுவர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, 6 சிறுவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more: மகனுடன் சேர்ந்து தாய் செய்யும் காரியமா இது? இருவரின் செயலால், போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை..

English Summary

school girl was sexually abused by her classmate

Next Post

"சினேகா அடிக்கடி மாத்தாத ஒரே விஷயம் இது தான்" உண்மையை போட்டுடைத்த பிரசன்னா..

Fri Mar 14 , 2025
prasanna reveals the secret about snekha

You May Like