fbpx

பாலிடெக்னிக் படித்த மாணவர்கள் அரியர் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு…! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

பாலிடெக்னிக் படித்த மாணவர்கள் அரியர் பாடங்களில் தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ; பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து குடும்பச் சூழ்நிலைகளால் தேர்ச்சி பெறாமல் நிலுவை வைத்துள்ள பாடங்களுக்கு (அரியர்ஸ்) தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு அளிக்குமாறு மாணவர்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன. முதல்வர் அவற்றை கனிவுடன் பரிசீலித்து உத்தரவிட்டதன் பேரில் அரியர் மாணவர்கள் தேர்வெழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

பாலிடெக்னிக் இறுதி ஆண்டு முடித்தும் பல்வேறு காரணங்களினால் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல், தங்கள் வாழ்வின் அடுத்த நிலைக்கு செல்ல இயலாத சூழ்நிலையை கருத்தில் கொண்டு வரும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் பருவத் தேர்வுகளின்போது அரியர் பாடங்களை எழுத சிறப்பு வாய்ப்பு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரங்களை மாணவர்கள் www.dte.tn.gov.in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த சிறப்பு வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Special opportunity for polytechnic students to write Aryan exams

Vignesh

Next Post

இனி அனைத்து வங்கிகளுக்கும் சனி, ஞாயிறு விடுமுறை..!! ஷிப்ட் முறையில் வேலை..!! ஏப்ரல் மாதம் முதல் அமல்..!! RBI-இன் புதிய விதிமுறை..!!

Tue Mar 18 , 2025
Bank employees will get 2 consecutive days off, Saturday and Sunday.

You May Like