fbpx

தமிழகமே…! நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை…!

நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 24-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 25-ம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26, 27-ம் தேதிகளில் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

English Summary

Heavy rains in 10 districts including Nilgiris today

Vignesh

Next Post

மது அடிமைகளுக்கு விமோசனம் அளிக்கும் சாஞ்சகல் கருப்பண்ணசுவாமி கோயில்..!! எங்க இருக்கு தெரியுமா..?

Sat Mar 22 , 2025
Sanchakal Karuppannaswamy Temple, which provides salvation to alcohol addicts..!! Do you know where it is..?

You May Like