fbpx

விபத்தில் பற்களை இழந்த சிறுவன்.. நண்பர்கள் கிண்டல் செய்ததால் தூக்கிட்டு தற்கொலை..!!

கர்நாடகாவில் விபத்தில் பற்களை இழந்த 18 வயது சிறுவனை சக நண்பர்கள் கிண்டல் செய்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் புவனகட்டே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மகள் விக்னேஷ் (வயது 18) இவர் அந்தப்பகுதியில் உள்ள தொழிற்பயிற்சி மையத்தில் ஐ.டி.ஐ படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விக்னேஷ் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் முகத்தில் பலத்த காயம் அடைந்த அவர் தன்னுடைய 17  பற்களை இழந்துள்ளார்.

செயற்கை பற்களை பொருத்துவதற்காக பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், செயற்கை பற்களை  பொருத்தமுடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர் விக்னேஷ் மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், பற்கள் இல்லாததால் விக்னேஷை  அக்கம்பக்கத்தினரும். தன்னுடன் படிக்கும் சக மாணவர்களும் கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது.

இதனால் விக்னேஷ் மிகவும் விரக்தி அடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த நிலையில் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய விக்னேஷின் பெற்றோர் வீட்டில் பிணமாக விக்னேஷ் தொங்குவதை பார்த்து கதறி அழுதனர். 

இது பற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து போலீசார் வந்து நடத்திய விசாரணையில், விபத்தில் பற்களை இழந்ததால் விரக்தியில் இருந்த விக்னேஷ்தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read more: “என் சீரீஸ் ஹார்ட் டிஸ்க் குப்பையில் வீசிட்டாங்க..” பெப்சி அலுவலகம் முன்பு நடிகை சோனா திடீர் போராட்டம்..!!

English Summary

18-year-old youngster in Koppa who lost 17 teeth in accident allegedly hangs himself to death

Next Post

பெண்களே..!! இனி தான் நீங்க ஜாக்கிரதையா இருக்கணும்..!! கோடை காலத்தில் இந்த நோயெல்லாம் உங்களை சும்மா விடாது..!!

Mon Mar 24 , 2025
கோடைக்காலங்களில் பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். இந்த கோடைக்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக, சிறுநீரக பிரச்சனைகள் என்று வரும்போது யூரினரி ட்ராக் தொற்றுக்கு நீங்கள் சிசிக்சை அளிக்காவிட்டால், அது உங்களை பல்வேறு பிரச்சனைகளுக்கு கொண்டு செல்லும். சிறுநீர் மண்டலத்தில் சிறுநீரகம், சிறுநீர்ப்பை, யுரித்ரா என எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொற்று ஏற்படலாம். பாக்டீரியா, சிறுநீர் பாதை வழியாக உள்ளே செல்கிறது. இது சிறுநீர் […]

You May Like