fbpx

ஆன்லைன் மூலம் NCET நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம்…!

ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் (என்சிஇடி) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு கணினி வாயிலாக ஏப்ரல் 29-ம் தேதி நடத்தப்படவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 20-ம் தேதி தொடங்கி 16-ம் தேவியுடன் கால அவகாசம் முடிவடைந்தது. இந்நிலையில், பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 31-ம் தேதி இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விருப்பமுள்ளவர்கள் https://exams.nta.ac.in/NCET/ எனும் வலைத்தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது ncet@nta.ac.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

English Summary

Time for students to apply for NCET entrance exam online until 31st

Vignesh

Next Post

மியான்மரை உலுக்கிய நிலநடுக்கம்!. பலி எண்ணிக்கை 150ஐ நெருங்கியது!. பாங்காக்கில் 9 பேர் பலி! 700க்கும் மேற்பட்டோர் காயம்!

Sat Mar 29 , 2025
Earthquake shakes Myanmar! Death toll nears 150! 9 dead in Bangkok! More than 700 injured!

You May Like