செங்கல்பட்டு அருகே கார் மீது கனரக லாரி மோதிய விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிங்கபெருமாள்கோயில் திருத்தேரி சிக்னலில் கார் நின்று கொண்டிருந்தது. அப்போது, பின்னால் வந்த கனரக லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த 3 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் மதுரையைச் சேர்ந்த அய்யனார், கார்த்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையிலேயே இந்த கோரச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.