fbpx

டாஸ்மாக் ரெய்டு விவகாரம்: தமிழக அரசு நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடியது தவறு..!! – அமலாக்கத்துறை குற்றசாட்டு

டாஸ்மாக் முறைகேடு வழக்கை அமலாக்கத்த்டுறை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவிற்கு அமலாக்கத்துறை பதில் அளித்துள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதனானது என அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குனரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல் தங்களை நள்ளிரவில் வீட்டிற்கு அனுப்பியதாகவும் பிரமாண பத்திரத்தில் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் செல்போன்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதால் குடும்பத்தினருக்கு கூட தகவல் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மட்டுமன்றி மனிதாபிமானமற்ற நடவடிக்கை எனவும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டாஸ்மாக் வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளும் விலகிய நிலையில்., இன்று இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்த்டுறை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவிற்கு அமலாக்கத்துறை பதில் அளித்துள்ளது.

அமலாக்கத்துறை சோதனைக்கான வாரண்ட்டை தமிழ்நாடு அரசிடம் காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.. சோதனைக்கு எதிராக எங்களிடம் முறையிட வாய்ப்பு இருந்தும் தமிழக அரசு நேரடியாக உயர் நீதிமன்ரத்தை நாடியது தவறு. சோதனையின் போது அதிகாரிகள் உணவருந்த, ஓய்வெடுக்க அனுமதி வழங்கிய பிறகே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. டாஸ்மாக் பெண் அதிகாரிகள் பாதுகாப்பான முறையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

Read more: கும்பகோணம் வெற்றிலை.. தோவாளை மாணிக்க பூ மாலைக்கு புவிசார் குறியீடு..!!

English Summary

The Enforcement Directorate has responded to the petition filed by the Tamil Nadu government opposing the Enforcement Directorate’s investigation into the TASMAC corruption case.

Next Post

இன்சுரன்ஸ் தொகையை பெற செட்டப் விபத்து..! தந்தை மகன் போட்ட ஸ்கெட்ச்.. அலேக்கா தூக்கிய போலீஸ்..!! 

Tue Apr 1 , 2025
Father Staged Crash To Declare His Living Son Dead In Order To Claim Rs 2 Crore Insurance; Arrested

You May Like