சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள தனிப்பட்ட உதவியாளர்கள் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற பணியின் விவரங்கள்
நீதிபதி தனிப்பட்ட உதவியாளர்கள் – 28
பதிவாளரின் தனிச் செயலாளர் – 1
தனிப்பட்ட உதவியாளர்கள் – 14
தனிப்பட்ட கிளார்க் – 4
வயது வரம்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் இப்பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி, 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபடியாக வயது வரம்பு 32 ஆக இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி எம்பிசி, பிசி பிரிவினருக்கு 37 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தெரிந்திருக்க வேண்டும். மேலும், அலுவலக ஆட்டோமேஷன் கணினியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
* நீதிபதி தனிப்பட்ட உதவியாளர்கள் மற்றும் பதிவாளரின் தனிச் செயலாளர் பதவிகளுக்கு நிலை -22 கீழ் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும்.
* தனிப்பட்ட உதவியாளர்கள் பதவிக்கு நிலை 16 கீழ் ரூ.36,400 முதல் ரூ.1,34,200 வரை சம்பளம் வழங்கப்படும்.
* தனிப்பட்ட கிளார்க் பதவிக்கு ரூ,20,600 முதல் ரூ.,75,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு பொது எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா ஆகியவற்றின் அடிப்படையில் நிரப்பப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: சென்னை உயர் நீதிமன்றத்தின் தனிப்பட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.mhc.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். நீதிபதி தனிப்பட்ட உதவியாளர்கள் மற்றும் பதிவாளரின் தனிச் செயலாளர் பதவிகளுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,200 செலுத்த வேண்டும்.
தனிப்பட்ட உதவியாளர்கள் பதவிக்கு ரூ.1000 செலுத்த வேண்டும். தனிப்பட்ட கிளார் பதவிகளுக்கு ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாறுத்திற்னாளிகள் மற்றும் ஆதரவற்ற கணவரை இழந்த பெண்களுக்கு கட்டணம் கிடையாது. அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.