திருநெல்வேலியை சேர்ந்தவர் அல்போன்ஸ்(35). இவர் பெங்களூருவில் மிக்சர் கம்பெனியை சொந்தமாக நடத்தி வருகிறார். இவரது கம்பெனியில் பவன்குமார் என்ற 19 வயது இளைஞனும், அவரது தம்பியும் வேலை செய்து வருகிறார்கள். இதனிடையே பவன்குமாருக்கு, கடை ஓனர் அல்போன்சின் மனைவி சத்யா(30) உடன் பழக்கம் ஏற்பட்டது..
அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்த விஷயம் கடை ஓனர் அல்போன்சுக்கு சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது. உடனே பவன்குமாரையும், அவரது தம்பியையும் வேலையில் இருந்து நீக்கிவிட்டார்.. இதையடுத்து அண்ணனும், தம்பியும் திருப்பத்தூர் மாவட்டம் மரிமாணிக்குப்பம் தோட்டிகுட்டை என்ற கிராமத்தில் பாட்டி வீட்டில் வந்து தங்கியிருந்தார்கள்.
தகாத உறவை கைவிட மறுத்த சத்யா பவன்குமாரிடம் தொடர்ந்து போனில் பேசி வந்தார்.. மேலும், அடிக்கடி தனிமையிலும் இருவரும் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது… இந்த விஷயம் கடை ஓனர் அல்போன்சுக்கு தெரியவரவே ஆத்திரமடைந்து சத்யாவை தாக்கியுள்ளார். இதையடுத்து கணவர் மீது பெங்களூரு போலீசில் புகார் அளித்தார். மேலும் விவகாரத்தும் கோரினார்.
இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அல்போன்ஸ் சம்பவத்திற்கு காரணமான பவன் குமாரை கொல்ல திட்டமிட்டார். பவன் குமாரின் பாட்டி வீட்டை நோட்டமிட்டு கொண்டிருந்த அல்போன்ஸ், உடனே காரில் வந்து, பவன்குமாரை சுற்றி வளைத்துக்கொண்டு கத்தியால் சரமாரி குத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, பவன்குமாரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையிலும், பிறகு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி பவன்குமார் இறந்துவிட்டார். இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அல்போன்சையும், நண்பர்கள் பாக்யராஜ் 40, பொன்னையா 37, அழகு என்கிற கதிர்வேலன்(41) ஆகிய 4 பேரையும் கைது செய்து, திருப்பத்தூர் ஜெயிலில் அடைத்தனர்.
Read more: ஆயுளைக் குறைக்கும் இந்த 7 பழக்கங்கள் உங்களிடம் உள்ளதா? உடனே மாத்துங்க!



