ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த ஒரு தனியார் கல்லூரியில், அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வரும் 19 வயது மாணவன், அதே கல்லூரியில் பணியாற்றும் 38 வயது லேப் டெக்னீசியனுடன் காதல் உறவில் இருந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் கல்லூரியிலேயே பணியாற்றும் 38 வயதான ஒரு பெண் லேப் டெக்னீசியன், தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். குடும்ப பிரச்சனைகளால் மனமுடைந்த அந்தப் பெண், தனது தனிமையை மாற்றும் வகையில் மாணவரிடம் உரையாட தொடங்கியதோடு, நெருக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது.
கடந்த மே மாதம், மாணவன் பெங்களூருக்கு படிப்பு தொடர்பாக செல்கிறேன் என கூறி மாணவன் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால், நீண்ட நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை.. செல்போன் அழைப்பும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், மாணவன் பெண் ஊழியருடன் சேர்ந்து பெங்களூரில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் மீட்ட போலீசார், ஆலோசனை வழங்கிய பின்னர், இருவரையும் தனித்தனியாக அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைத்தனர். 38 வயது பெண் ஆசிரியர், 19 வயது மாணவனுடன் இரண்டு மாதங்களாக உல்லாசமாக இருந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தற்போது சித்தூரிலும், ஆந்திராவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி–கல்லூரிகளில் பணியாற்றும் ஊழியர்களின் போக்கை கண்டித்து, மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் வகையில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Read more: பெற்றோர் உடல்நிலையை கவனிக்க 30 நாட்கள் விடுமுறை…! மத்திய அரசு அறிவிப்பு