ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு உள்ளூர் மார்க்கெடில், தனது தலையில் நீல நிற டிரம் சிக்கிய நிலையில் ஒரு காளை அப்பகுதிக்குள் அங்கும் இங்கும் சுற்றி திரிந்ததால் குழப்பம் ஏற்பட்டது. காளையால் தானாக அந்த டிரம்மை அகற்ற முடியவில்லை.. அந்த காளையின் பெரிய கொம்புகள் அதில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.. நீண்ட நேர முயற்சிகளுக்குப் பிறகு கிராம மக்கள் டிரம்மில் இருந்து காளையை விடுவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது..
அந்த வீடியோவில், காளை தனது தலையில் சிக்கிய நீல நிற டிரம் உடன், மார்க்கெட்டில் ஒரு காளை சுற்றித்திரிவதை காணலாம். கிராம மக்கள் அதன் தலையில் இருந்து டிரம்மை அகற்ற முயன்றனர், ஆனால் பயந்துபோன காளை அதை ஆபத்து என்று கருதி விலகி சென்றது..
காளை தனது தலையில் இருந்த டிரம்மை அகற்ற போராடுவதை கிராம மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.. இரண்டு அல்லது மூன்று கிராமவாசிகள் காளைக்கு உதவவும் அதன் தலையில் சிக்கிய டிரம்மை அகற்றவும் முன் வந்தனர். பின்னர் கிராமவாசிகளில் ஒருவர் சுத்தியலின் உதவியுடன் டிரம்மை அகற்ற முயன்றார், ஆனால் அது பலனளிக்கவில்லை.
இந்த சம்பவத்தின் வீடியோவை அபிஷேக் குமார் என்ற பயனர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில், ” இந்த வைரல் வீடியோ ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்தது, அங்கு ஒரு தெருவில் திரியும் காளையின் தலையில் நீல நிற டிரம் சிக்கி சந்தையை சுற்றித் திரிந்தது. சுமார் 10 நிமிட முயற்சிக்குப் பிறகு, அதன் தலையில் இருந்து டிரம் அகற்றப்பட்டது.” என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே தெருவில் திரியும் காளைகள் சம்பந்தப்பட்ட ஒரு கொடூரமான சம்பவம் லக்னோவின் கஜுஹா பகுதியை உலுக்கியுள்ளது.. 58 வயது நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார், இது சிசிடிவி கேமராக்களில் முழுமையாக பதிவாகியுள்ளது. விஜய் ரஸ்தோகி தனது 4 வயது பேரனுடன் மாலையில் நடைபயணம் மேற்கொண்டிருந்தபோது, இரண்டு ஆக்ரோஷமான காளைகள் அந்த இருவரையும் தாக்கின..