90 கண்டெய்னர்களுடன் புறப்பட்ட சரக்கு ரயில் திடீர் மாயம்..!! அதிர்ந்துபோன ரயில்வே நிர்வாகம்..!!

நாக்பூர் – மும்பை இடையே 90 கண்டெய்னர்களுடன் சென்ற சரக்கு ரயில் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாக்பூரில் உள்ள சர்வதேச சரக்குப் பெட்டக முனைய டெப்போவில் இருந்து மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு 90 கன்டெய்னர்களுடன் சரக்கு ரயில் பிப்ரவரி 1ஆம் தேதி அன்று சென்றது. இந்த ரயிலில் அரிசி, காகிதம், பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயனப் பொருள்கள் உள்ளிட்ட ஏற்றுமதிக்கான பொருட்கள் இருந்தன. இந்த ரயில் 4 முதல் 5 நாட்களுக்குள் மும்பை சென்று சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், 12 நாட்களுக்கு மேலாகியும் ரயில் அங்கு சென்றடையவில்லை. ரயில் சரக்கு போக்குவரத்து தகவல் அமைப்பு மூலம் சரக்கு ரயில் எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்து கண்டறிய முடியும். ஆனால், இந்த சரக்கு ரயில் எங்குள்ளது என்பதைக் காண முடியவில்லை. இந்நிலையில், கன்டெய்னர் கார்ப்பரேஷன் நிறுவன முதன்மை மேலாளர் சந்தோஷ் குமார் சிங், சரக்கு ரயில் காணாமல் போனதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், காணாமல்போன சரக்கு ரயிலைத் தேடி வருகிறோம். ரயில் எங்குள்ளது என்பதை சரியாக கண்டறிய முடியவில்லை. இதற்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம். ரயில்வே அதிகாரிகள் ரயிலைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்” என்றார். இந்த சரக்கு ரயில் கடைசியாக நாசிக் – கல்யாண் இடையே, ஓம்பர்மாலி ரயில் நிலையத்தில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகுதான் ரயில் இருக்கும் இடம் தெரியவில்லை என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றன. இதற்கிடையே ரயில் காணாமல்போனது குறித்து தகவலறிந்த ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Chella

Next Post

இவர்களுக்கு எல்லாம் ரேஷன் அட்டை கிடையாது.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..

Wed Feb 15 , 2023
இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய ரேஷன் அட்டை வழங்கக்கூடாது என்று உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.. பொது விநியோக திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கடைகளை நடத்தி வருகின்றன.. நாடு முழுவதும் சுமார் 4.99 லட்சம் ரேஷன் கடைகள் உள்ளன. கூட்டுறவுத்துறை வழியாக அனைத்து ஊர்களிலும் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப ரேஷன் கடைகளை அமைந்துள்ளது. ரேஷன் கடைகளில் மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், […]

You May Like