இவர்களுக்கு எல்லாம் ரேஷன் அட்டை கிடையாது.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..

இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய ரேஷன் அட்டை வழங்கக்கூடாது என்று உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது..

பொது விநியோக திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கடைகளை நடத்தி வருகின்றன.. நாடு முழுவதும் சுமார் 4.99 லட்சம் ரேஷன் கடைகள் உள்ளன. கூட்டுறவுத்துறை வழியாக அனைத்து ஊர்களிலும் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப ரேஷன் கடைகளை அமைந்துள்ளது. ரேஷன் கடைகளில் மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு போன்ற பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு நலத்திட்டங்களும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது..

ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றம்..!! இனி கவலையே வேண்டாம்..!! மத்திய அரசு உத்தரவு..!!

இந்நிலையில் இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய ரேஷன் அட்டை வழங்கக்கூடாது என்று உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.. உணவு பொருள் வழங்கல் துறை இதுகுறித்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.. அதில் “ இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய ரேஷன் அட்டை வழங்கக்கூடாது.. அதிகாரிகளுக்கு மேலும் ரேஷன் கடைகளில் POS இயந்திரம் மூலம் மட்டுமே வேட்டி, சேலை தர வேண்டும். ரேஷன் கடைகளில் இருப்பு வைத்துக் கொண்டு விநியோகம் செய்யாமல் இருக்க கூடாது.. திறக்கப்படாத கடைகள் குறித்து வட்ட வழங்கல் அலுவலரிடம் விளக்கம் கேட்கப்படும்..

ஒரே நபர் தமிழகம், வெளி மாவட்டம், மாநிலங்களில் ரேஷன் அட்டை வைத்திருப்பது பற்றி கள விசாரணை நடத்த வேண்டும்.. அந்த விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்பிக்க வேண்டும். பணி நாட்களில் ரேஷன் கடைகளை காலை 9 மணிக்கே திறந்து பொருட்களை விநியோகிக்க வேண்டும்.. ஆதாருடன் வங்கி கணக்கை இணைக்க ரேஷன் அட்டைதாரர்களிடம் அறிவுறுத்த வேண்டும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

மேலதிகாரிகளின் டார்ச்சர் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி…..!

Wed Feb 15 , 2023
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதியில் டிராக்டர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் என்ற நபர் கடந்த 10 வருட காலமாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 12ஆம் தேதி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்திய […]

You May Like