காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த புள்ளலூர் கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உடல் சோர்வுடன் காணப்பட்டுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மாணவியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்து பார்த்த மருத்துவர், மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.
இதை சற்றும் எதிர்பாராத பெற்றோர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக மாணவியிடம் விசாரித்த போது, கோவிந்தவாடி கிராமத்தை சேர்ந்த லோகநாதன் (21) என்பவர் தன்னிடம் நட்பாக பேசி, அடிக்கடி பரிசுப்பொருட்களை வாங்கிக் கொடுத்து நெருகி பழகி வந்ததாகவும், ஆசைவார்த்தை கூறி என்னை பலமுறை பலாத்காரம் செய்ததாகவும் மாணவி அழுதபடியே கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், கல்லூரி மாணவன் லோகநாதனை போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.