கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் என்.டி.ஏ பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த பிரச்சார கூட்டத்தில் இபிஎஸ், நயினார், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார்.. அப்போது தமிழ் சகோதர சகோதரிக்கு வணக்கம் என்று கூறி தனது உரையை தொடங்கினார்..
தொடர்ந்து பேசிய அவர் ” தமிழ் புத்தாண்டு புதிய ஆற்றலையும் புதிய நம்பிக்கையை கொடுக்கும்.. நான் எப்போது கோவைக்கு வந்தாலும் உங்களில் ஒருவனாக உணர்கிறேன்..
பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்து வைத்தோம்.. தனிப்பட்ட முறையில் எல்லா கட்சிகளிடமும் ஆலோசனை கூறினேன்.. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த முயற்சி தோல்வி அடைந்தது.. காங்கிரஸ், திமுகவும் வெறுப்பு அரசியலுக்கு தங்களுக்கு இரையாக்கினார்கள்.. இந்த மசோதா சட்டமாகி இருந்தால், தமிழ்நாட்டிற்கு அதிக எம்.பிக்கள் கிடைத்திருக்கும்.. திமுக இதை விரும்பவில்லை.. திமுகவின் குட்டு வெளிப்பட்டு விட்டது..
கருப்பு உடை அணிந்து தங்களின் தீய எண்ணங்களுக்கு திரை போட்டுவிட முடியாது என்பதை திமுகவினருக்கு நான் கூறிக்கொள்கிறேன்.. பொய்களை பேசும் திமுகவால் இனிமேல் பொய்களை மறைக்க முடியாது..
தமிழர்களே உங்களுக்கு ஒன்றை உறுதியுடன் கூறிக் கொள்கிறேன்.. இது எங்கள் போராட்டத்தின் முடிவு அல்ல தொடக்கம் தான்.. பாஜகவும் தேசிய ஜனநாயக கூட்டணியும் உங்கள் உரிமைக்காக தொடர்ந்து போராடுவார்கள்..
இந்த முறை சொல்லிக் கொள்ள திமுகவிடம் எந்த சாதனைகளும் கிடையாது.. பெண்கள் முன்னேற்றத்தை திமுக விரும்பவில்லை.. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. திமுக பெண்களை துன்புறுத்துகிறது.. அவர்கள் நாடாளுமன்றத்திற்குள் திமுகவினர் பெண்களுக்கு ஆதரவாக இருப்பதில்லை..
நான் தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதரியும், திமுகவினரை பார்த்து கேள்வி எழுப்ப வேண்டும்.. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை ஏன் எதிர்த்தார்கள் என்று கேளுங்கள்.. தமிழ்நாட்டு பெண்களே ஏப்ரல் 23-ம் தேதி திமுகவுக்கு தெளிவான வலுவான செய்தியை வழங்குங்கள்..
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் மேலும் மேலும் பணக்காரராக வருகிறார்கள்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களின் கடன் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது..
தமிழ்நாட்டில் முதலமைச்சரும் ஒரே குடும்பம்.. துணை முதலமைச்சர் அதே குடும்பம், எம்.பிக்கள் அதே குடும்பம்.. திரைப்படங்கள், ஊடகங்களை ஒரே குடும்பம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.. தமிழ்நாட்டில் ஒரு குடும்பத்திலே பெரும் போட்டி நிலவுகிறது.. இங்கே மகனுக்கும் மருமகனுக்கும் இடையே, யார் அதிகமாக கொள்ளையடிக்கிறார் என்பது தான் போட்டியே.. ஆளுமையில் தொலைநோக்கு தான் இன்று தமிழ்நாட்டிற்கு அத்தியாவசியமான தேவை.. மகன், மருமகன் இடையேயான போட்டி தேவை இல்லை.. திமுக குடும்பத்தின் ஊழலால் மக்கள் துன்பப்படுகின்றனர். ஆனால் என்.டி.ஏ ஆட்சிக்கு வந்த உடன் திமுகவின் குற்றச்செயல்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..” என்று தெரிவித்தார்..



