திடீரென மின்னல் வேகத்தில் வந்த கருப்பு உருவம்!. நேபாளத்தில் மீண்டும் வெள்ளம்!. 4 பேர் பலி!. மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

nepal flood 30kb

நேபாளத்தின் கோர்க்கா மாவட்டத்தில் பூ கண்டகி ஆற்றில் ஏற்பட்ட திடீர் கருப்பு நிறத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் நதிக்கரையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக மேடான பகுதிகளுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இன்று அதிகாலையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.


சுமுப்ரி ஊரக நகராட்சிப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சும்கே கோலா ஓடை தடைபட்டதாகவும், அதனைத் தொடர்ந்து இந்த பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜகத் மற்றும் சல்லேரி பஜார் பகுதிகளில் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டிருந்த 5 முதல் 7 வீடுகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டன. மேலும் கீழ்ப்பகுதிகளிலும் சில வீடுகள் சேதமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நேபாள தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் (NDRRMA) வெள்ள முன்னறிவிப்புப் பிரிவு மூலம் பொதுமக்களுக்கு மொபைல் குறுஞ்செய்தி (SMS) மூலம் அவசர எச்சரிக்கையை விடுத்தது. பொதுமக்கள் யாரும் நதியை நெருங்க வேண்டாம் என்றும், திரிசூலி தோபன் வரை உள்ள மக்கள் பாதுகாப்பான உயரமான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக நேபாள ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் வான்வழி கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். சல்லேரி பஜார் மற்றும் ஜகத் பஜார் பகுதிகள் ஆபத்தானவையாகக் கருதப்படுவதால், அங்குள்ள மக்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

அருவகாட் பகுதி காவல் நிலைய அதிகாரிகள், ஒலிபெருக்கிகள் மூலம் நதிக்கரை ஓர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நிலச்சரிவு காரணமாக ஆற்றின் குறுக்கே உருவான இயற்கை அணை திடீரென உடைந்து நீர்வரத்து அதிகரித்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

1newsnationuser5

Next Post

சென்னையில் கோலாகலமாக தொடங்கிய மெட்ரோ 2-ம் கட்ட சேவை!. பிரதமர் மோடியும், முதல்வர் விஜய்யும் தொடங்கி வைத்தனர்!.

Sun Oct 11 , 2026
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட வழித்தடமான பூந்தமல்லி – வடபழனி இடையேயான சேவையை பிரதமர் மோடியும், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் இணைந்து இன்று (அக்டோபர் 11, 2026) கொடியசைத்துத் துவக்கி வைத்தனர். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மோடியை முதலமைச்சர் விஜய் நேரில் வரவேற்றார். மேலும் அவருக்கு வழி நெடுகிலும் பாஜகவின் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மெட்ரோ சேவை தொடக்கம் உள்ளிட்ட […]
pm modi cm vijay 30kb

You May Like