விழுப்புரம் – மயிலாடுதுறை – தஞ்சாவூர் இடையே 193 கிமீ தொலைவிற்கு இரட்டை ரயில் வழித்தடம்…! மத்திய அரசு ஒப்புதல்

train

விழுப்புரம் – மயிலாடுதுறை – தஞ்சாவூர் இடையே 193 கிமீ தொலைவிற்கு இரட்டை ரயில் வழித்தடம் அமைப்பது குறித்த விரிவான செயல்திட்ட அறிக்கையைத் தயாரிக்க ஒப்புதல் வழங்கப்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


மாநிலங்களவையில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், விழுப்புரம் – மயிலாடுதுறை – தஞ்சாவூர் இடையே ரயில்போக்குவரத்து மேலும் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே தஞ்சாவூர் – நாகப்பட்டினம் – காரைக்கால் இடையே 96 கிமீ தொலைவிற்கான ரயில் வழித்தடம் அமைப்பது குறித்த ஆய்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விரிவான செயல்திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விரிவான செயல்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், நித்தி ஆயோக், மத்திய நிதியமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு ஒப்புதல் பெறப்படும். இத்தகைய திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருபவை என்றும் இதன் நடைமுறைகள் மாறுதலுக்கு உட்பட்டது என்பதால் இது குறித்த உறுதியான கால வரையறையைத் தெரிவிக்க இயலாது. தமிழ்நாட்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீடு அண்மை ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் பாதுகாப்புப் பணிகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மேற்கொள்வதற்காக பட்ஜெட்டில் கடந்த 2009 முதல் 2014 வரை ஆண்டு ஒன்றுக்கு 879 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்ததாகவும் 2025-26-ல் 6,626 கோடி ரூபாய் (ஏழரை மடங்கு கூடுதல்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் துரிதப்பட்டுள்ளதாகவும், அவற்றை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

தமிழகமே...! வரும் 15-ஆம் தேதி சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்...!

Sat Dec 13 , 2025
சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு வரும் 15-ஆம் தேதி சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. மங்களகரமான தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது கார்த்திகை சுபமுகூர்த்த நாளான 15.12.2025 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் […]
Tn Government registration 2025

You May Like