உத்தரப்பிரதேசம் மாநிலம் கன்ச் பகுதியை சேர்ந்த அனில் என்பவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மாமா மகளான அனிதா என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு அனில் தன்னுடைய மனைவி அனிதா மற்றும் தம்பி சச்சின் உடன் ஒன்றாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை அவரும் அவருடைய தம்பியும் வேலைக்குச் சென்றுள்ளனர். மாலை வீடு திரும்பிய போது வீடு பூட்டப்பட்டிருந்தது. உடனே பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அருகே தரையில் அனிதா உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். அந்த அறை முழுவதும் பொருள்கள் சிதறி கிடந்ததுடன் அருகில் ரத்தக்கரை படிந்த அரிவாள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இருவரும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அனிதாவின் சகோதரர் சந்திரபால், அனில் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அனிதாவின் கொலைக்கு அவரது கணவர் தான் காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அனிலுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இந்த விஷயம் அனிதாவுக்கு தெரியவரவே இருவருக்கும் இடையே தகாறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று தகாத உறவை கைவிடக் கோரி மனைவி கணவரின் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அனில் அனிதாவை கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



