வெறித்தனமான ஆட்டம்; 918 பந்துகளில் 98 சிக்சர்கள்!. 20 ஆண்டு கால டி20 சாதனையை உடைத்த இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் தொடர்!.

India WI sixes 30kb

டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய சாதனையாக, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் அதிவேகமாக ரன்கள் குவிக்கப்பட்ட தொடராக உருவெடுத்துள்ளது. இந்தத் தொடரில் வெறும் 918 பந்துகளில் மொத்தம் 98 சிக்சர்கள் பறக்கவிடப்பட்டு கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த இரண்டு தசாப்தங்களில் ஆண்கள் டி20 கிரிக்கெட்டில் 4000-க்கும் மேற்பட்ட போட்டிகளும் 550 இருதரப்புத் தொடர்களும் விளையாடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஐபிஎல் தொடரின் தாயகமான இந்தியாவில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் பேட்டர்களின் ஆதிக்கம் ஓங்கியுள்ளது. மைதானங்களின் தன்மையும், பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டமும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக மாறியுள்ளன.

இந்தத் தொடரில் இரு அணி வீரர்களும் சிக்சர் மழை பொழிந்து முந்தைய அனைத்து சாதனைகளையும் தகர்த்துள்ளனர். பந்துவீச்சாளர்கள் திணறும் அளவிற்கு பேட்டிங்கிற்குச் சாதகமாக அமைந்துள்ள இந்தத் தொடர், உலக டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் வித்தியாசமான ஒரு அத்தியாயமாக பதிவாகியுள்ளது.

1newsnationuser5

Next Post

டெல்லி இல்ல... இந்தியாவிலேயே காற்று மாசு மிக மோசமான நகரம் இதுதான்!. உலகளவில் டாப் 5!. மூச்சுவிடவே திணறும் மக்கள்!.

Fri Oct 16 , 2026
இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் மும்பையின் காற்று மாசு அளவு மிகவும் மோசமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஐக்யூ ஏர்’ (iQAir) உலகளாவிய காற்று தர மதிப்பீட்டு அமைப்பின் தரவுகளின்படி, இந்தியாவின் மிகவும் மாசுபட்ட நகரமாகவும், உலகளவில் ஐந்தாவது மிகவும் மாசுபட்ட நகரமாகவும் மும்பை பதிவாகியுள்ளது. நேற்று வியாழக்கிழமை நிலவரப்படி மும்பையின் காற்று தரக் குறியீடு (AQI) 152 ஆகப் பதிவாகியுள்ளது. இது ‘ஆரோக்கியமற்றது’ (Unhealthy) என்ற பிரிவின் […]
Mumbai air worst 30kb

You May Like