சமீபத்தில், தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில், தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் தாயார் மற்றும் கே.எஸ். அல்லு ராமலிங்கையாவின் மனைவி காலமானார்கள். இது தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. அந்த வகையில், தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜுனின் வீட்டில் பெரும் சோகம் நடந்துள்ளது.. நடிகர் அல்லு அர்ஜுனின் பாட்டி கனகரத்தினம்மா, 94 வயதில் காலமானார். அவரது உடல் காலை அல்லு அரவிந்தின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது..
அல்லு கனக ரத்னம்மா வயது முதிர்வு காரணமாக காலமானதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) அதிகாலை அவர் உயிர் பிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அல்லு கனக ரத்னம்மாவின் இறுதிச் சடங்குகள் இன்று மதியம் ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியான கோகாபேட்டையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. அல்லு அர்ஜுனின் வீட்டில் நடந்த சோகச் செய்தி தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..
பாட்டி இறந்த செய்தியைக் கேட்டு நடிகர் அல்லு அர்ஜுன் மும்பையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டதாக கூறப்படுகிறது.. மெகா குடும்பத்தினர் ஏற்கனவே அல்லுவின் வீட்டை அடைந்துவிட்டனர்.
ராம் சரண் மற்றும் அல்லு அர்ஜுன் உறவினர்கள். அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்த் மற்றும் ராம் சரணின் சிரஞ்சீவியும் மைத்துனர்கள். சிரஞ்சீவி தற்போது அல்லு அரவிந்துடன் இருப்பதாகவும், இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மறுபுறம், மெகா குடும்ப உறுப்பினர்களும் ஒவ்வொருவராக ஹைதராபாத் வந்து கொண்டிருக்கிறார்கள். மைசூரில் நடந்த ‘peddi’ படப்பிடிப்பில் பங்கேற்ற ராம் சரண் வருவதாக கூறப்படுகிறது.. அல்லு அர்ஜுன் மதியம் மும்பையில் இருந்து வருவார் என்று கூறப்படுகிறது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் எம்.எல்.சி நாகபாபு ஆகியோர் விசாகப்பட்டினத்தில் ஒரு பொதுக் கூட்டம் இருப்பதால் வர முடியவில்லை. அவர்கள் நாளை ஹைதராபாத் வந்து அல்லுவின் குடும்பத்தினரைச் சந்திக்க உள்ளனர். அல்லு கனகரத்தினம்மாவின் மறைவுக்கு அல்லு அர்ஜுன் ரசிகர்கள், திரையுலக ரசிகர்கள் உட்பட பலர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
Read More : விஜய்யின் அரசியல் வருகை.. திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டியா? ஓரே வரியில் முதல்வர் சொன்ன ‘நச்’ பதில்!