ஆப்பிள் ஐபோன் என்பது ஆப்பிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஐஓஎஸ் இயங்குதளத்தில் இயங்கும் ஒரு ஸ்மார்ட்போன் ஆகும். இது ஸ்டீவ் ஜாப்ஸால் என்பவரால் 2007-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிள் ஐபோனில் பல்வேறு மாடல்கள் உள்ள நிலையில், iPhone 16, iPhone 16 Pro, iPhone 15, மற்றும் iPhone 14, iphone 17 போன்ற புதிய மாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு மாடலுக்கும் வெவ்வேறு விலை நிர்ணயிக்கப்படும். அதேசமயம் புதிய மாடல்கள் வெளிவரும் போது முந்தைய மாடல்களுக்கு விலை குறைப்பு செய்யப்படும். ஐபோன்கள் அவற்றின் வன்பொருள், கேமரா மற்றும் செயல்திறன் ஆகியவற்றால் அதிக மக்கள் விரும்பும் போனாக அறியப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் வந்தாலே டெக் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பது ஒரே ஒரு விஷயத்திற்காக தான். அது புதிய ஐபோன் வெளியீடு. அந்த வகையில் இந்தாண்டுக்கான மெக அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது ஆப்பிள் நிறுவனத்தின் புத்தம் புதிய ஐபோன் 18 சீரிஸ் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் iPhone 18 Pro, iPhone 18 Pro Max மற்றும் தனது முதல் மடிக்கக்கூடிய (foldable) போனாகிய iPhone Duo ஆகியவற்றிற்கான அதிகாரப்பூர்வ விலைகள் மற்றும் விற்பனைத் தேதிகளை வெளியிட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மூன்று போன்களிலும், அதிநவீன 2nm தொழில்நுட்பத்தில் இயங்கும் ஆப்பிளின் புதிய A20 Pro சிப்செட் இடம்பெற்றுள்ளது.
iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max ஆகிய இரண்டும் டீப் பிளாக், கிளேசியர், சில்வர் மற்றும் பர்கண்டி ஆகிய நிறங்களில் வெளிவருகின்றன. இவற்றின் முன்பதிவு செப்டம்பர் 12 அன்று மாலை 5:30 மணிக்குத் தொடங்கி, செப்டம்பர் 18 முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இதற்கான வங்கித் தள்ளுபடியாக ரூ. 7,000 வரை வழங்கப்படுகிறது. iPhone 18 Pro-வின் தொடக்க விலை ரூ. 1,64,900-லிருந்து தொடங்கி, அதன் 2TB மாடல் ரூ. 3,14,900 வரை விற்கப்படுகிறது. இதேபோல், iPhone 18 Pro Max ரூ. 1,79,900 தொடக்க விலையிலும், அதன் 2TB வேரியண்ட் ரூ. 3,29,900 விலையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெரிய டிஸ்ப்ளே விரும்பும் பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள iPhone 18 Pro Max அதே நிறத்தேர்வுகளில் வெளிவருகிறது. இதன் 256GB அடிப்படை மாடல் ரூ. 1,79,900 விலையிலும், 512GB மாடல் ரூ. 2,04,900 விலையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் 1TB பதிப்பு ரூ. 2,54,900-க்கும், அதிகபட்சமான 2TB சேமிப்பகப் பதிப்பு ரூ. 3,29,900-க்கும் விற்பனைக்குக் கிடைக்கவுள்ளது. Pro மாடலைப் போலவே இதன் முன்பதிவும் செப்டம்பர் 12-ல் தொடங்கி, செப்டம்பர் 18 முதல் விற்பனைக்கு வருகிறது; இதிலும் ரூ. 7,000 வரை வங்கித் தள்ளுபடி உண்டு.
அல்ட்ரா-பிரீமியம் பிரிவில் அறிமுகமாகும் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான iPhone Duo, நைட் ஸ்கை மற்றும் ஸ்டார் ஒயிட் ஆகிய இரண்டு நிறங்களில் வருகிறது. மிகவும் விலையுயர்ந்த இந்த மாடலின் 256GB தொடக்க விலை ரூ. 2,99,900 ஆகும். இதன் 512GB மாடல் ரூ. 3,24,900-க்கும், 1TB மாடல் ரூ. 3,74,900-க்கும் மற்றும் இதன் உச்சபட்ச 2TB மாடல் ரூ. 4,49,900 வரை விலையிடப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு அக்டோபர் 16 அன்று மாலை 5:30 மணிக்குத் தொடங்கி, அக்டோபர் 23 முதல் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரவுள்ளதுடன், இதில் ரூ. 7,000 வங்கித் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.



