மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

tasmac

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி இன்று 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, வள்ளலார் நினைவு தினம் போன்ற முக்கிய நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. மேலும், தலைசிறந்த சமூகத் தலைவர்களின் நினைவு தினங்களிலும் அந்தந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் 68-வது நினைவு தினம் இன்று அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது.

இந்நாளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அமைச்சர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்த வருகை தருவார்கள்.

இதன் காரணமாக பாதுகாப்பு நலன் கருதி இன்று (செப்டம்பர் 11) ஆகிய இரண்டு நாட்கள் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள் செயல்படாது என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தடையை மீறி மது பாட்டில்களை பதுக்கி வைப்பது அல்லது கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read more: பெண்களே..!! இனி ரூ.5 லட்சம் மானியம் பெற இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்..!! தமிழ்நாடு அரசு சூப்பர் அறிவிப்பு..!!

English Summary

A holiday has been declared for TASMAC shops in 4 districts today.

Next Post

ஷாக்கிங் நியூஸ்..!! தீயாய் பரவும் “முத்தப் பூச்சிகள்”..!! கடித்தால் பயங்கர விஷம்..!! 1 லட்சம் பேர் பாதிப்பு..!! இதயத்திற்கு மிகவும் ஆபத்து..!!

Thu Sep 11 , 2025
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ‘முத்தப் பூச்சிகள்’ (Kissing bugs) வேகமாகப் பரவி வருகின்றன. இவை ‘சாகஸ் நோய்’ என்ற தீவிரமான நோயை ஏற்படுத்துவதால், சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நோய் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ‘ட்ரையடோமைன் பூச்சிகள்’ (Triatomine bugs) என்றும் அழைக்கப்படும் இந்த பூச்சிகள், மனிதர்களின் வாய் அல்லது கண்களுக்கு […]
Kissing Bugs 2025

You May Like