”தொடைநடுங்கி தலைவர்.. இந்த மண்ணாங்கட்டிக்கு ‘மார்டன் சோழன்’ பில்டப் ஒன்று தான் குறைச்சல்..” தவெகவை வெளுத்துவிட்ட திமுக..!

vijay dmk it wing

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் ஒருவர், தவெக பெண் நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்..


இதையடுத்து உதயநிதிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தவெக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது.. இதுகுறித்து தவெக ஐடி விங் வெளியிட்ட அறிக்கையில் “ ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்து, சிறையிலடைத்து, விரைந்து நடவடிக்கை எடுத்ததை நாடே அறியும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கவே இயலாது. காரணம், இது மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவரின் அரசு. இன்னும் சொல்லப் போனால் இது மாடர்ன் மனுநீதிச் சோழன் அரசு. தப்பு செய்தவர் யாராக இருந்தாலும், எத்தகைய நிலையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவது உறுதி. அதே சமயத்தில் குற்றத்தில் சம்பந்தப்படாதவர்கள் பாதிக்கப்படாத வகையில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் உறுதி.

நியாயமான நீதியை வழங்காமல் மனசாட்சியைக் குப்பையில் வீசிவிட்டு, குப்புறப் படுத்துக் கிடந்த பவளவிழா பாப்பா அரசன்று இந்த அரசு. உண்மை என்பது உப்புக்குக்கூட இந்த உதறல்நிதியிடம் இருக்காது என்பது உயர்தனி உண்மை. இருந்தாலும் அண்ணா பல்கலைக்கழகக் கொடூரச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சதிகாரர் ‘யாரந்த சார்?’ என்று இப்போதாவது அல்லது எப்போதாவது உளறல்நிதி, உண்மைநிதியாகப் பேசத் தயாரா?” என்று தெரிவித்திருந்தது..

இந்த நிலையில் தவெகவின் ஐடி விங்கிற்கு திமுக ஐடி விங் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக ஐடி விங் “ எதுவும் தெரியாத மாடர்ன் மங்குனி 24ஆம் புலிகேசி அரசே! அரசியல் அரிச்சுவடி கூடத் தெரியாமல், மூக்கு சீந்தி, Victim Card எடுத்து அழுது, குழந்தைகளிடம் பிச்சை எடுத்து, அப்படியும் pass mark வாங்க வக்கற்று, கடைசியில் Sofa அனுப்பி கட்சிகளிடம் ஆதரவு பெற்று பதவி வெறியில் பொறுப்புக்கு வந்த புறம்போக்குகள் எல்லாம் தி.மு.கழகத்தை விமர்சிப்பது நகைப்பிற்குரியது.

ஸ்ரீவைகுண்டத்தில் தவெக கட்சி நிர்வாகிகளே தவெக கட்சியின் பெண் தொண்டரை வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததை மூடிமறைக்க முடியாமல், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க வக்கில்லாத தொடை நடுங்கி தவெக தலைவர் IT Wing மூலம் அறிக்கை விட்டு, அசிங்கத்தை மறைக்கப் பார்க்கிறார். The Joke is on you, Coward!

இந்த மண்ணாங்கட்டிக்கு ‘மார்டன் சோழன்’ பில்டப் ஒன்று தான் குறைச்சல்! “புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்தோம்” என்று மார்தட்டுகிறீர்களே, பாலியல் வன்கொடுமை செய்தது யார்? உங்கள் கட்சியின் இளைஞரணியினர் தானே! குற்றம் செய்தவனைத் தட்டிக்கேட்க வேண்டிய உங்கள் கட்சியின் எம்.எல்.ஏ சரவணன், “அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி வேலை வாங்கித் தருகிறேன்” என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேரம் பேசியது தான் உங்கள் லட்சணமா?

“மேலிடத்துக்கு எல்லாம் தெரியும்” என்று குற்றவாளிகளே வாக்குமூலம் அளித்த பிறகு, #யார்அந்தமேலிடம் என்ற கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? இல்லை! அதற்குப் பதிலளிக்க வக்கற்ற நீங்கள், மற்றவர்களைப் பார்த்துப் பொங்குகிறீர்கள்.

உங்கள் அறிக்கையில் அண்ணா பல்கலைக்கழகச் சம்பவம் பற்றி ஏதோ நீங்கள் தான் இன்று புதிதாகக் கண்டுபிடித்தது போலப் பிதற்றியுள்ளீர்கள். கடந்த டிசம்பர் 2024-ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தில், குற்றவாளி ஞானசேகரனைச் சில நாட்களிலேயே கைது செய்து, சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைத்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, விரைவாக 5 மாதத்தில் தண்டனை பெற்றுத் தந்தது கழக அரசு! “குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்ததில் காவல்துறையின் செயல்பாடு பாராட்டுக்குரியது” என்று உயர்நீதிமன்றமே பாராட்டியது.

இது கூடத் தெரியாத உங்கள் அறிவுத் திறன் எதிரிக்கு கூட கிடைக்கக் கூடாது பாவம் என நினைத்துத் தமிழ்நாடே சிரிக்கிறது! பொள்ளாச்சி வழக்கிலும் திமுக ஆட்சி அமைத்தது முதல் தொடர்ந்து களத்திலும் நீதிமன்றத்திலும் போராடியது திராவிட முன்னேற்றக் கழகம். கழகத்தின் தொடர் அழுத்தத்தாலும், சட்டப் போராட்டத்தாலும் தான், சிபிஐ (CBI) விசாரணை முடுக்கிவிடப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுத் தரப்பட்டது. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்ச ரூபாய் இழப்பீடும் பெற்றுத் தந்தது.

ஆகவே, கழகத்தை நோக்கி விரல் நீட்டும் தார்மீக உரிமை, “சிங்கப்பெண்” என்ற பெயரில் வீடியோ போட்டுவிட்டு, நிஜத்தில் பெண்களைச் சீரழிக்கும் சொந்தக் கட்சிப் பொறுப்பாளர்களைப் பாதுகாக்கும் உங்களுடைய ‘சோஃபா மாடல்’ கத்துக்குட்டி அரசுக்குச் சிறிதும் கிடையாது.

ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பஞ்சாயத்து செய்த எம்.எல்.ஏ சரவணனையும், அதற்கு உடந்தையாக இருந்த “மேலிடத்தையும்” விசாரிக்கும் தைரியம் உங்கள் மாடர்ன் மங்குனி அரசுக்கு இருக்கிறதா? அதை முதலில் சொல்லுங்கள்!..” என்று தெரிவித்துள்ளது..

Read More : உளறல்நிதி, உண்மைநிதியாக பேசத் தயாரா? அறிவாலய மியூசிக்கிற்கு அடிமையான தீர்ந்து போன சக்தி..” உதயநிதி, இபிஎஸ் மீது தவெக அட்டாக்..!

RUPA

Next Post

இந்த இடங்களில் சாப்பிடுவது லட்சுமி தேவியின் அருளை நீக்கிவிடும்..! வாஸ்து குறிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்..!

Fri Jun 12 , 2026
இந்திய பாரம்பரியம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சாப்பிடுவது என்பது பசியைத் தீர்ப்பது மட்டுமல்ல, அது ஒரு முக்கியமான சடங்காகவும் கருதப்படுகிறது. எனவே, சாப்பிடும்போது இடம், திசை மற்றும் சூழல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்துவது அறிவுறுத்தப்படுகிறது. இன்றைய வேகமான வாழ்க்கையில், மக்கள் தங்களுக்கு வசதியான இடங்களில் எல்லாம் சாப்பிடுகிறார்கள், ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின்படி, இந்தப் பழக்கம் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவது: வாஸ்து சாஸ்திரத்தின்படி, படுக்கையில் […]
vastu tips1 1 1

You May Like