சகாரா பாலைவனத்திற்கு அடியில் புதைந்திருக்கும் பிரம்மாண்ட ஏரி..! 4 கோடி மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து..!

Sahara 2026

இன்று வறண்டு கிடக்கும் உலகின் மிகப்பெரிய சகாரா பாலைவன பகுதியில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்காவின் 5 பெரும் ஏரிகளை விட பிரம்மாண்டமான நன்னீர் ஏரி ஒன்று பரந்து விரிந்திருந்ததாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார் 3.61 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் கம்பீரமாகக் காட்சியளித்த அந்தப் பிரம்மாண்ட ‘மெகா-சாட்’ (Mega-Chad) ஏரி, காலப்போக்கில் ஏற்பட்ட பருவநிலை மாற்றங்களால் சுருங்கி, தற்போது ஆப்பிரிக்காவின் சாட், நைஜர், நைஜீரியா மற்றும் கேமரூன் ஆகிய நாடுகளின் எல்லையில் ஒரு சிறிய ‘சாட் ஏரி’யாக மட்டுமே எஞ்சியுள்ளது.


அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ்’ இதழில் வெளியான ஆய்வறிக்கையின்படி, நவீன காலக்கணிப்பு தொழில்நுட்பத்தைப் (OSL) பயன்படுத்தி இந்த ஏரியின் புவியியல் வரலாறு கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றம் பெற்ற இந்த ஏரி, பூமியின் சுழற்சி மாற்றங்களால் ஏற்பட்ட தீவிர பருவமழை காரணமாக, 11,500 ஆண்டுகளுக்கு முன்பு தனது உச்சபட்ச பரப்பளவை எட்டியது. அக்காலகட்டத்தில் ஆறுகளும், ஏரிகளும், பசுமையான தாவரங்களுமாக செழித்துக் காணப்பட்ட வட ஆப்பிரிக்கப் பகுதி, சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த தீவிர காலநிலை மாற்றத்தால் வறட்சியடைந்து வற்றத் தொடங்கியது.

பண்டைய ‘மெகா-சாட்’ ஏரி இயற்கை மாற்றங்களால் பல ஆயிரம் ஆண்டுகளில் சுருங்கிய நிலையில், நவீன ‘சாட் ஏரி’ மனிதர்களின் கண்மூடித்தனமான பயன்பாட்டினாலும் இன்றைய தீவிர புவி வெப்பமயமாதலினாலும் மிகக் குறுகிய காலத்தில் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 1963-ஆம் ஆண்டில் 26,000 சதுர கிலோமீட்டராக இருந்த இந்த ஏரியின் பரப்பளவு, தற்போது 90 சதவீதத்திற்கும் மேல் வறண்டு வெறும் 1,500 சதுர கிலோமீட்டருக்கும் கீழ் சுருங்கிப்போயுள்ளது.

விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழில்களுக்காக இந்த ஏரியின் நீர்வளத்தை மட்டுமே நம்பி வாழும் சாட் படுகைப் பகுதியின் 4 கோடிக்கும் அதிகமான மக்களின் அன்றாட வாழ்வாதாரம் இதனால் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. உலக அளவில் இயற்கை வளங்களின் சீரழிவையும், காலநிலை மாற்றத்தின் கோர முகத்தையும் உணர்த்தும் அபாயகரமான எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

Read More : 70 வயதுக்கு மேல் இருந்தால் பதவிகள் பறிப்பு..!! இளைஞர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி..!! முக.ஸ்டாலின் அதிரடி முடிவு..!!

Next Post

உலகக்கோப்பை ஹாக்கி தொடர்!. வேல்ஸை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கிய இந்தியா!.

Sun Aug 16 , 2026
எந்தவொரு அணி விளையாட்டுப் போட்டியிலும் உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டங்கள் எப்போதுமே சவாலானவையாகவே இருக்கும். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியுடன் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. நெதர்லாந்தின் அம்ஸ்தல்வீன் நகரில் உள்ள வாகெனார் ஹாக்கி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. டோக்கியோ மற்றும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் […]
HockeyWorldCup

You May Like