10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மதுரையில் 155 கிராம உதவியாளர் பணியிடங்கள்..!! உடனே விண்ணப்பிங்க..

job 2

மதுரை மாவட்டத்தில் கிராம உதவியாளர் (Village Assistant) பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட வருவாய் அலகின் கீழ் உள்ள 11 வட்டங்களில் மொத்தம் 155 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


காலிப்பணியிடங்கள்:

  • மதுரை கிழக்கு -5
  • கள்ளிக்குடி – 2
  • மேலூர் – 23
  • மதுரை வடக்கு – 15
  • மதுரை தெற்கு – 7
  • திருமங்கலம் – 7
  • உசிலம்பட்டி – 8
  • வாடிப்பட்டி – 13
  • மதுரை மேற்கு – 11
  • பேரையூர் – 28
  • திருப்பரங்குன்றம் – 6
  • மொத்தம் – 155

வயது வரம்பு:

பொதுப்பிரிவு: குறைந்தபட்சம் 21 வயது, அதிகபட்சம் 32 வயது

பிசி / எம்பிசி / டிசி: அதிகபட்சம் 39 வயது

எஸ்சி / எஸ்டி / விதவைகள்: அதிகபட்சம் 42 வயது

முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்: அரசின் விதிப்படி வயது தளர்வு வழங்கப்படும்

கல்வித் தகுதி: தமிழ்நாடு அரசுத்தேர்வுகள் இடைநிலை (10th) தேர்வில் தமிழ் ஒரு பாடமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் வாசிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

மற்ற தகுதிகள்: மிதிவண்டி அல்லது இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும் கிராமம் / தாலுகா எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி? மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க https://madurai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தொடர்ந்து, அதில் கேட்டிருக்கும் விவரங்களை நிரப்பி, கல்வித்தகுதி, வீட்டு முகவரி, அடையாள சான்று ஆகியவற்றை இணைத்து தபால் வழியாகவோ அல்லது நேரடியாகவோ வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 15.11.2025.

Read more: மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் ருச்சக ராஜயோகம்..! வெற்றியுடன், செல்வமும் குவியப்போகுது..!!

English Summary

A new employment notification has been published for the post of Village Assistant in Madurai district.

Next Post

பல பெண்களுடன் ரூம் போட்டு உல்லாசமாக இருந்த காவலர்..!! அடுத்தடுத்து வந்த ஃபோன் காலால் ஆடிப்போன மனைவி..!!

Sun Oct 26 , 2025
கோவையில் காவலர் பல பெண்களுடன் தகாத உறவில் இருப்பதாக அவரது மனைவி புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்த சந்தியா தேவி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் காவலர் ஆறுமுகம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் ஆறுமுகம் பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதை அறிந்த சந்தியா தேவி தனது கணவரிடம் இதுகுறித்து வினவியபோது, அவர் அவர்களை எல்லாம் […]
Kovai Crime 2025

You May Like