உக்ரைனுக்கு புதிய அதிபரை தேர்வு செய்யவேண்டும்!. டிரம்ப் பேச்சால் பதற்றம் அதிகரிப்பு!

zelensky trump

அமெரிக்கா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நிலவி வந்த மோதல் போக்கு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ரஷ்யாவுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள டீசல் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் உரசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தை உக்ரைன் தரப்பு போருக்கான மறைமுக முதலீடு என விமர்சித்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் தாக்கு தொடுத்துள்ளார். உக்ரைன் மக்கள் தங்களுக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் இதுவென டிரம்ப் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.


வரவிருக்கும் இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் ரஷ்யாவுடன் டிரம்ப் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். இதன் கீழ் முதல் கட்டமாக 3 லட்சத்திற்கும் அதிகமான டன் டீசலும், தொடர்ந்து நவம்பரில் 5 லட்சம் டன்னும், அதைத் தொடர்ந்து உடனடியாக 1 மில்லியன் டன்னும் ரஷ்யாவிலிருந்து விநியோகிக்கப்பட உள்ளது. ரஷ்யா மீதான உள்கட்டமைப்புத் தாக்குதல்களை நிறுத்தும்படி பலமுறை கோரிக்கை விடுத்தும் ஜெலென்ஸ்கி அதைக் கேட்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ள டிரம்ப், அமைதி ஒப்பந்தத்தை எட்டத் தவறிய அவர் உக்ரைனுக்குத் தகுதியான தலைவர் அல்ல எனத் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் 30 சதவீதப் பகுதிகளை இழந்து, மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்கக் காரணமான இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அவர் விரும்பவில்லை என்றும் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.

டிரம்பின் இந்தக் கருத்துக்கு உக்ரைன் நிதி அமைச்சர் அந்திரி சைபிகா மற்றும் பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ஹாம் (Andy Burnham) ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜெலென்ஸ்கி நாட்டு மக்களின் முழு ஆதரவுடன் தனது கடமையைச் சிறப்பாகச் செய்து வருவதாகப் பிரிட்டன் பிரதமர் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார். மறுபுறம், டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பை கிரெம்ளின் தரப்பு “வரலாற்றுச் சிறப்புமிக்கது” என வரவேற்றுள்ளது சர்வதேச அரசியல் அரங்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

100 ஆண்டுகால உறவு!. இந்திய ரசிகர்களை கவர செம மூவ்!. மிரட்டலான ஜெர்சியை வெளியிட்ட நியூசி.!

Sun Oct 11 , 2026
இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கிடையேயான விளையாட்டு உறவு நூறாண்டுகளை எட்டியுள்ளதைக் கொண்டாடும் வகையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணி வரவிருக்கும் ஒருநாள் தொடரில் பிரத்யேகமான ‘கோஹிதாங்கா’ (Kotahitanga) ஜெர்சி அணிந்து களமிறங்கவுள்ளது. இந்திய கலாச்சாரத்தின் அடையாளமான தாமரை மலர்கள் மற்றும் மண்டலா கலை வடிவங்கள் இந்த புதிய ஜெர்சியில் இடம்பெற்றுள்ளது இரு நாடுகளுக்கு இடையேயான பந்தத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. கிரிக்கெட் மீதான காதலால் இரண்டு வெவ்வேறு கலாச்சாரங்களை ஒன்றாக இணைக்கும் […]
New Zealand jersey 30kb

You May Like