நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிட விவரம்:
- ஆலோசகர் (Yoga & Naturopathy) – 2
- மாவட்ட தர ஆலோசகர் – 1
- மாவட்ட ப்ரோகிராமர் மேனேஜர் – 1
- சிகிச்சை உதவியாளர் – 3
- MPHW (சித்தா) – 2
- ஆடியோதெரபிஸ்ட் – 2
- பல் டெக்னீஷியன் – 1
- ஆடியோகிராபிஸ்ட் – 1
- ரேடியோகிராப்பர் – 2
- டேட்டா உதவியாளர் – 1
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – 17
சம்பளம்:
- ஆலோசகர் (Yoga & Naturopathy) – ரூ.40,000
- மாவட்ட தர ஆலோசகர் – ரூ.40,000
- மாவட்ட ப்ரோகிராமர் மேனேஜர் – ரூ.40,000
- சிகிச்சை உதவியாளர் – ரூ.13,000
- MPHW (சித்தா) – ரூ.10,000
- ஆடியோதெரபிஸ்ட் – ரூ.23,000
- பல் டெக்னீஷியன் – ரூ.23,000
- ஆடியோகிராபிஸ்ட் – ரூ.12,600
- ரேடியோகிராப்பர் – ரூ.17,250
- டேட்டா உதவியாளர் – ரூ.13,300
- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – ரூ.15,000
வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு வயது வரம்பு என்பது மாவட்ட நலவாழ்வு சங்க விதிமுறைகளுக்கு உட்பட்டு நிர்ணயிக்கப்படும்.
கல்வித்தகுதி:
* ஆலோசகர் (Yoga & Naturopathy) – BNYS பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
* மாவட்ட தர ஆலோசகர் – பல் / ஆயுஷ் / நர்சிங் / சமூக அறிவியல் / வாழ்வு அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் மருத்துவமனை நிர்வாகம் / பொது சுகாதாரம் / சுகாதார மேலாண்மை முதுகலை; அனுபவம் அவசியம்.
* மாவட்ட ப்ரோகிராமர் மேனேஜர் – BSMS டிகிரி; கணினி பயன்பாடு தெரிந்திருக்க வேண்டும்.
* சிகிச்சை உதவியாளர் – நர்சிங் தெரபிஸ்ட் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
* ஆடியோதெரபிஸ்ட் – அதற்கான இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
* பல் டெக்னீஷியன் – 1 அல்லது 2 ஆண்டு சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
* ரேடியோகிராப்பர் – அதற்கான டிகிரி அல்லது சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
* டேட்டா உதவியாளர் – கணினி அறிவியல் / IT இல் இளங்கலை பட்டம் மற்றும் 1 ஆண்டு அனுபவம்.
* பல்நோக்கு மருத்துவமனை உதவியாளர் – குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி; தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்த பணியிடங்கள் தற்காலிக முறையில் நிரப்பப்படுவதால், விண்ணப்பதார்களுக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
- விண்ணப்பத்தை நீலகிரி மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
- விண்ணப்பத்தை முழுமையாக நிரப்ப வேண்டும்.
- பணிக்கு தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தபால் வழியாக அல்லது நேரடியாக சமர்ப்பிக்கலாம்.
நீலகிரி மாவட்டநலவாழ்வு சங்கம் முகவரி:
மாவட்ட நல்வாழ்வு சங்கம்,
எண்.38, ஜெயில் ஹில் சாலை,
சிடி ஸ்கேன் அருகில் உதகமண்டலம் – 643001.
கடைசி தேதி: நவம்பர் 28-ம் தேதி மாலை 5 மணிக்குள் இப்பணியிடங்களுக்கான விண்ணப்பத்தை உரிய விவரங்களுடன் பூர்த்தி செய்து சமர்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.
Read more: தாலியோட ஈரம் கூட காயல.. புதுமாப்பிள்ளைக்கு கனவிலும் நடக்க கூடாத சம்பவம்..! என்ன ஆச்சு..?



