டிப்ளமோ முடித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. ரூ.1,40,000 சம்பளம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

job 5

மத்திய அரசின் தேசிய நீர் மின்சக்தி உற்பத்தி நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பணியிட விவரம்:

உதவி ராஜ்பாஷா அதிகாரி – 11
ஜூனியர் பொறியாளர் (சிவில்) – 109
ஜூனியர் பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) – 46
ஜூனியர் பொறியாளர் (மெக்கானிக்கல்) – 49
ஜூனியர் பொறியாளர் (E & C) – 17
மேற்பார்வையாளர் (IT) – 1
சீனியர் கணக்காளர் – 10
இந்தி மொழிப்பெயர்ப்பாளர் – 5

வயது வரம்பு: மத்திய அரசி நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். வயது வரம்பில் தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி:

* உதவி ராஜ்பாஷா அதிகாரி – இந்தி மொழி மற்றும் ஆங்கிலம் பாடமாக கொண்ட முதுகலை பட்டப்படிப்பு இருக்க வேண்டும்.

* ஜூனியர் பொறியாளர் – சிவில் பொறியியல் / எலெக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் / எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

* மேற்பார்வையாளர் (Supervisor) – DOEACC உடன் டிகிரி (அல்லது) கணினி அறிவியல் / ஐடி-யில் டிப்ளமோ (அல்லது) பிசிஏ / கணினி அறிவியல் / ஐடி-யில் B.Sc. பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

* சீனியர் கணக்காளர் (Senior Accountant) – CA / CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* இந்தி மொழிபெயர்ப்பாளர் – இந்தி பாடத்தில் முதுகலை பட்டப்படிப்பு (அல்லது) ஆங்கிலத்துடன் இந்தி மொழி கொண்ட முதுகலை பட்டப்படிப்பு. குறைந்தது 1 ஆண்டு அனுபவம் அவசியம்.

சம்பளம்:

* உதவி ராஜ்பாஷா அதிகாரி பதவிக்கு ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

* ஜூனியர் பொறியாளர் பதவிக்கு ரூ.29,600 முதல் ரூ.1,19,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

* மேற்பார்வையாளர் பதவிக்கு ரூ.29,600 முதல் ரூ.1,19,500 சம்பளம் வழங்கப்படும்.

* சீனியர் கணக்காளர் பதவிக்கு மாதம் ரூ. 29,600 முதல் ரூ.1,19,500 வழங்கப்படும்.

* இந்தி மொழிப்பெயர்ப்பாளர் பதவிக்கு ரூ.27,000 முதல் ரூ.1,05,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

  • கணினி வழி எழுத்துத் தேர்வு (Computer Based Test) நடத்தப்படும்.
  • தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடைபெறும்.
  • மொத்தம் 200 மதிப்பெண்கள் கொண்ட Objective Type கேள்விகள் கேட்கப்படும்.
  • Negative Marking உண்டு.
  • பொது பிரிவு (General/OBC/EWS): 40% மதிப்பெண்கள் பெற வேண்டும்.
  • எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகள் (SC/ST/PwBD): 35% மதிப்பெண்கள் பெற்றால் போதும்.
  • தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள்.
  • சான்றிதழ் சரிபார்ப்பில் தகுதி பெற்றவர்களுக்கு இறுதி நியமன ஆணை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nhpcindia.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Read more: பிரதமர் வீட்டுக்கு தீ வைப்பு.. நேபாள அரசுக்கு எதிராக தீவிரமடையும் GenZ கிளர்ச்சி..!!

English Summary

A notification has been issued for numerous vacant posts in the National Hydropower Generating Authority of India, a central government agency.

Next Post

தீவிரமடையும் Gen Z போராட்டம்.. நாட்டை விட்டு தப்பி ஓடும் நேபாள பிரதமர் ! தொடரும் பதற்றம்!

Tue Sep 9 , 2025
நாடு தழுவிய போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி நாட்டை விட்டு தப்பி ஓட தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன… பொதுமக்களின் சீற்றம் அதிகரித்து அரசியல் ஸ்திரமின்மை ஆழமடைந்து வரும் நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக கே.பி. சர்மா ஓலி துபாய்க்கு ஒரு பயணத்தைத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனியார் விமான நிறுவனமான ஹிமாலயா ஏர்லைன்ஸ் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகரித்து வரும் அரசியல் […]
nepal pm

You May Like